உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடியாக பதிவாகும் பத்திரங்களை ரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி

மோசடியாக பதிவாகும் பத்திரங்களை ரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்வது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பத்திர ரத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.தமிழகத்தில் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் வாயிலாக மோசடி நடக்கிறது.இவ்வாறு அபகரிக்கப்பட்டது குறித்து அசல் உரிமையாளர் புகார் அளித்தால், அதுபற்றி விசாரித்து மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யலாம்.இதற்கான சட்டத்திருத்தம், 2022 ஆக., 16ல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில், 11,000 புகார்கள் பெறப்பட்டதில், 1,100 புகார்கள் தொடர்பான மோசடி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்துவது குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபரில் தடை விதித்தது.அதனால், அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து அடிப்படையில், மோசடி பத்திர புகார்கள் மீதான விசாரணையை நிறுத்த, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2023 அக்டோபரில் உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற இறுதி உத்தரவு வரும் வரை மோசடி பத்திரங்கள் தொடர்பாக, 2022 ஆக., 16க்கு முன்னும், பின்னும் வந்த புகார்கள் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மோசடி பத்திரங்கள் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிப்., 12ல் பிறப்பித்த உத்தரவில், மோசடி பத்திரங்கள் மீது மாவட்ட பதிவாளர்கள் விசாரணை மேற்கொள்ள தடையில்லை என்று தெரிவித்தது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோசடி பத்திரங்கள் வழக்கில், உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுபடி, புகார்களை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தடை எதுவும் இல்லை.ஆனால், இதன்படி, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் நிர்வாக ரீதியான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களுக்காக மாவட்ட பதிவாளர்கள், புகார்தாரர்கள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை