உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துறை வாரியாக வழக்குகள்: அரசு வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கீடு

துறை வாரியாக வழக்குகள்: அரசு வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர்கள் கையாள்வதற்கு என, துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடர், சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர், அரசு வழக்கறிஞர்கள் என, 120க்கும் மேல் உள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நியமிக்கப்பட்ட அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் இருவரும், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு பிளீடராக எட்வின் பிரபாகர் நியமிக்கப்பட்டனர். அரசு பிளீடராக பதவி வகித்த முத்துக்குமார், கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.புதிய அட்வகேட் ஜெனரல், அரசு பிளீடர் பதவியேற்றதும், அரசு வழக்கறிஞர்களுக்கு மீண்டும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர், அரசு வழக்கறிஞர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

யார், யாருக்கு?

 ஹிந்து சமய அறநிலையத்துறை, ஏற்கனவே அந்த துறையை கவனித்து வரும் சிறப்பு பிளீடர் அருண் நடராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவில் வழக்குகள், சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன்; வரிகள் தொடர்பான வழக்குகள், சிறப்பு பிளீடர் எம்.வெங்கடேஸ்வரன்; சிவில் மேல்முறையீட்டு வழக்குகள், சிறப்பு பிளீடர் ஆர்.அனிதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது கல்வித்துறை பணிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிறப்பு பிளீடர் மைத்ரேயி சந்துரு; கல்வித்துறை பணிகள் சாரா வழக்குகள், சிறப்பு பிளீடர் யு.எம்.ரவிச்சந்திரன்; உயர் கல்வித்துறை, சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர்; வருவாய் துறை, சிறப்பு பிளீடர் செல்வேந்திரன். பதிவுத்துறை, சிறப்பு பிளீடர் யோகேஷ் கண்ணதாசன்; வனத்துறை, சிறப்பு பிளீடர் எஸ்.அனிதா; கூட்டுறவுத்துறை வழக்குகள், சிறப்பு பிளீடர் கீதா தாமரைசெல்வன் மற்றும் எஸ்.ரவிக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று அமல்

இவ்வாறு துறைகள் வாரியாகவும், எந்தெந்த நீதிமன்றங்களில் எந்தெந்த வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்ற பட்டியலையும், அரசு பிளீடர் பிறப்பித்து உள்ளார். இந்த நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், ஒதுக்கப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில், தவறாமல் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகவும், அரசு பிளீடர் அறிவுறுத்தி உள்ளார்.அரசு வழக்கறிஞர்களுக்கு பெரும்பாலும் துறைகள், நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கான கட்டண விகிதாசாரம் பகிர்வு நடைமுறை முடிவுக்கு வருகிறது. இந்த நடைமுறையால், உழைப்பவர்களுக்கு கிடைக்கும் கட்டணம் சொற்பமாக உள்ளதாக, அரசு வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துறைகள் ஒதுக்கீடு?

சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர், அரசு வழக்கறிஞர்களுக்கு என துறைகள் ஒதுக்கப்பட்டது போல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள், சட்டப்பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனைகளை பெற முடியும். முக்கிய வழக்குகளில், கூடுதல்அட்வகேட் ஜெனரல் ஆஜராகும்படி கோரமுடியும்.கடந்த காலங்களில் தி.மு.க., - - அ.தி.மு.க., ஆட்சியின் போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பதவி வகித்தவர்களுக்கு, துறைகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், தற்போதுள்ள கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கும், துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை