உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் என்பது டம்மியான பதவி: பன்னீர் செல்வம் "ஓபன் டாக்"

துணை முதல்வர் என்பது டம்மியான பதவி: பன்னீர் செல்வம் "ஓபன் டாக்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: துணை முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மியான பதவி என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் என நான் சொன்னதை இ.பி.எஸ்.,ஏற்க மறுத்தார். அவர் பொதுச்செயலாளராக தொடரக்கூடாது என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடந்து வருகிறது. துணை முதல்வர் பதவி எனக்கு கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டது. அந்தப்பதவியை நான் வேண்டாம் என கூறினேன். அது டம்மி பதவி அதிகாரம் இல்லாத பதவி. என்னை கட்டாயப்படுத்தி அந்த பதவியைக் கொடுத்தார்கள்.பிரதமர் மோடிக்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,. பிரதமரின் 10 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்தது அடுத்து வரக்கூடிய லோக்சபா தேர்தலில் கூட மோடி தான் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வரவேண்டும். லோக்சபா தேர்தலை பொருத்தவரையிலும் பா.ஜ., தலைமையில் தான் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
ஜன 05, 2024 11:31

athu unkalku ippathaan புரியுதா எல்லாத்திலும் நீக்க லேட்டா சார்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 05, 2024 10:41

இப்படி அழுது நடிக்கும் பன்னீர், தான் கொள்ளை அடித்து சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துக்களை மக்களுக்கு கொடுப்பாரா? ஊழல்வாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். மோடிஜி ஆட்டத்தை தொடங்கி விட்டார். திருடனுக்கு இனி அரசியலில் இடமில்லை.


Saravana kumar
ஜன 05, 2024 08:45

இவர் பெயரிலும் இவர் குடும்பத்தார் பெயரிலும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாதா நல்லவர் போலவே பகல் வேஷம் போடும் தண்ணீரைப் பற்றி உலகத்துக்கும் தெரியும் தினமலருக்கும் தெரியும்


Mani . V
ஜன 05, 2024 05:04

எது கட்டாயப்படுத்தி கொடுத்தார்களா? அப்ப உனக்கு வாய்க்குள் விரலை வைத்தால்கூட கடிக்கத் தெரியாது. இப்படி ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத நீதான் தமிழகத்தை ஆண்டதா? அதர்மயுத்தம் வெள்ளிவிழா (25 years) கொண்டாட வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
ஜன 05, 2024 00:15

இது எங்களுக்கு இப்பொழுதே தெரியுமே. அதான் அந்த டம்மி பதவி பற்றி. கட்டாயப்படுத்தினால், ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏதும் இல்லையே பன்னீர். ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்? ஏன் இப்பொழுது அழுது புலம்புகிறீர்கள். இனியாவது சுயமரியாதையோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். துஷ்டர்களை கண்டால் தூர விலகுங்கள். நல்லவர்களை நாடி செல்லுங்கள்.


Seshan Thirumaliruncholai
ஜன 04, 2024 20:54

தி மு க அரசில் துணை தலைமை அமைச்சர் கிடையாது. ஆனால் தலைமை அமைச்சர் பங்கேற்க இயலாத நிகழ்ச்சிகளில் உதய நிதி பதிலாக கலந்தகொண்டு வருகிறார். மறை முக நாடகங்களை மக்கள் புரிந்துகொள்வர்.


K.Ramakrishnan
ஜன 04, 2024 18:45

டம்மி பதவி என்று தெரிந்தும் அதில் விடாப்பிடியாக உட்கார்ந்து இருந்தது ஏன்? அதை தூக்கி எறிந்து விட்டு அன்றே வெளியே வந்திருக்கலாமே....


aaruthirumalai
ஜன 04, 2024 18:32

ஐயாவுக்கு இப்பதான் கண்ணு தெரியுதுபோல


குமரி குருவி
ஜன 04, 2024 18:25

துணை இணை என்பதெல்லாம்டம்மி என பன்னீருக்கு இப்போதான் தெரியுதா..? இவர் அரசியலை படிக்கும் முன்...திராவிட கழகங்களே இருக்காது


சூரியா
ஜன 04, 2024 17:55

என்னவோ தர்ம யுத்தம் என்பது இவரது பாட்டன் வீட்டு சொத்து போலப் பிதற்றுகிறார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை