உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

அ.தி.மு.க., மருத்துவர் அணி இணைச் செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒரு திட்டத்தை எடுத்தால், அது முழுமையடைந்த பின் தான் திறப்பு விழா நடத்துவார். கடந்த ஆட்சியில் 90 சதவீதம் பணிகள் முடிந்தால் கூட திறக்க மாட்டார். ஆனால், தி.மு.க., ஆட்சியில், 10 சதவீத பணிகளை முடித்து விட்டு, அதற்கு கருணாநிதி பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டுகிறார். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமை அடையவில்லை. அவசர கோலத்தில் பஸ் நிலையம் திறக்கப்பட்டு, அதற்கும் கருணாநிதி பெயரை சூட்டி உள்ளனர்.

மக்கள் பயன்பாட்டுக்கு என்பதை விட, கருணாநிதி பெயரை சூட்டணும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அவசர அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

தி.மு.க., - எம்.பி., ராஜா மேடையில் பேசியபோது, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வரலாற்றை தவறாக பேசி உள்ளார். இப்படி பேசித்தான் தி.மு.க.,வை வளர்க்க வேண்டுமா. மேடையில் ஏறினாலே பொய் மட்டும் தான் பேச வேண்டும் என சத்திய பிரமாணம் எடுத்துள்ளாரா? அவர் தன் பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் நேரத்துல, தன்னை யாரும் மறந்துட கூடாதுன்னு, இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசுறாரான்னு தெரியலையே!

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி:

த.மா.கா., தலைவர் வாசன், பார்லிமென்டில் கடந்த நான்கு ஆண்டுகளில், 39 முறை, தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளுக்கும், மீனவர்கள், நெசவாளர்கள் என, அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். தி.மு.க., ஆட்சியின் மூன்று ஆண்டுகளில், அரசின் நிர்வாகத்தை கண்டித்து, கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, 78 மாவட்டங்களில், 16 போராட்டங்களை நடத்திஉள்ளோம்.

மாவட்டத்துக்கு ஒரு போராட்டம் நடத்தினாலே, 78 நடத்தியிருக்கணுமே... போராட்டம் நடத்துறதுல இவரது கட்சி, 'வீக்'காதான் இருக்குது!

தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் வீரா.ராஜமாணிக்கம் அறிக்கை:

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்கள், வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோல, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கேட்டால் தான் ஆச்சு என நினைத்து, கோரிக்கை அம்பை வீசுறாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Ramakrishnan
பிப் 17, 2024 17:20

ஆசிரியர்களே... உங்கள் சவுகரியத்துக்கு ஒவ்வொரு பட்டமாக வாங்கிக் கொண்டே போவீர்கள். அதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் ஊக்க ஊதியம் என்றபெயரில் உங்களுக்கு தரவேண்டுமா? அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மட்டுமே எந்த அரசாங்கமாக இருந்தாலும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் அன்றாட கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை இன்றளவும் அப்படியே தான் இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர் கண்டக்டர்களாக எத்தனையோ பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இது போல ஊக்கஊதியம் கிடையாதே.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகை ஏன்? .ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எல்லாம் யாரும் வாய் திறந்து கேட்டதுண்டா?


K.Ramakrishnan
பிப் 17, 2024 17:17

78 மாவட்டங்களில் 16 போராட்டமா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு...வாசனுக்கு செல்வாக்கு இருப்பது உண்மை என்றால் தஞ்சை தொகுதியில் அவர் தனித்து நின்று ஜெயிச்சு காட்டத் தயாரா?


K.Ramakrishnan
பிப் 17, 2024 17:12

ஏம்பா டாக்டர் சரவணா... இவ்வளவு வியாக்கியானம் பேசுற நீ... எதுக்குப்பா அந்த கட்சியில எம்.எல்.ஏ. ஆகி குப்பை கொட்டடுன......


தமிழ் நாட்டு அறிவாளி
பிப் 17, 2024 09:10

செங்கல்பட்டு, தம்மபாரம் எல்லாம் புறநகர் னு சொல்லிக்கிட்டு சென்னைக்குள்ள இருந்துகிட்டு நக்கல் பன்னுனவன் எல்லாம் இப்போ பஸ் ஏற கிளம்பாக்கம் போறோமே என்ற ஆற்றாமைதான் இந்த புலம்பலுக்கு காரணம். இந்த கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வந்து பாருங்க மக்களே. வடிவேல் சொல்றமாதிரி எல்லாம் துபாய் ரோடு மாதிரி பளபளனு இருக்கு


T.sthivinayagam
பிப் 17, 2024 04:06

திரு வாஜ்பாய் திரு அத்வானி பெயரை மறக்க அவர் என்ன பாஜகா மோடி அரசின் தலைவரா


vaiko
பிப் 17, 2024 01:34

சரவணன் இன்று எந்த கட்சியில் இருக்கின்றார்?


Ramesh Sargam
பிப் 17, 2024 00:45

நான் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் கருணாதி பெயர் சூட்டுவேன். எதற்கு? தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சுடுகாடுகளுக்கும்.


Ramesh Sargam
பிப் 17, 2024 00:44

பெயரை இப்படி மாற்றலாம்: "முழுமையாக முடிக்கப்படாத கலைஞர் நூற்றாண்டு பஸ் கிளம்பாதபாக்கம் பஸ் வளாகம்" என்று.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை