உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய மாவட்ட பா.ஜ., தலைவர் கைது

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய மாவட்ட பா.ஜ., தலைவர் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாக கூறி, அவரது சகோதரர் விருதகிரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை போலீசார், ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ், நெய் குப்பை ஸ்ரீநிவாஸ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு ஆகியோரை கைது செய்தனர்.வழக்கில் தொடர்புடைய பா.ஜ., மாவட்ட தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், செய்யூர் வக்கீல் ஜெயச்சந்திரன், திருச்சி பிரபாகரன் ஆகிய ஐந்து பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்.இதில், மும்பையில் பதுங்கியிருந்த பா.ஜ., மாவட்ட தலைவர் அகோரத்தை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று மயிலாடுதுறை அழைத்து வந்து, தரங்கம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VSaminathan
மார் 17, 2024 07:11

குடியரசுனாலே திராவிட .......


VSaminathan
மார் 17, 2024 07:10

முதல்ல பாஜ க பிறகட்சிகளிலிருந்து வந்து சேரும் குறிப்பாக தி மு க அ தி மு க மதுரையில் சேர்த்துக் கொள்ளவே கூடாது-அவர்கள் தான் இவ்வாறு அதிகாரப் பசியெடுத்து ஒவ்வொரு முறையும் வெற்றி பெறப்போகும் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்துகின்றனர்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை