மேலும் செய்திகள்
வாரிசுகளுக்கு சீட் கேட்டு தி.மு.க., தலைகள் படையெடுப்பு
6 hour(s) ago | 20
சென்னை: தமிழகத்தில் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (பிப்.,14) முதல் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
6 hour(s) ago | 20