மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
மதுரை:தமிழக பா.ஜ., 'ஸ்டார்ட் அப்' பிரிவு சார்பில், 'இன்னொவேட் தமிழ்நாடு' எனும் மாநில அளவிலான புதிய தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி, மார்ச் 7ல் ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலையில் நடக்கிறது.தொழில்முனைவோரை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு தேவையான வளங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வழிவகுப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.முக்கிய முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கும் மேலான இளம் தொழில் முனைவோர் பங்கேற்கின்றனர்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். சிறப்பாக படைப்புகளை முன்வைக்கும் பங்கேற்பாளர்களுக்கு முதலீடு ஈட்டும் வாய்ப்புகள், தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்கள், பரிசுகள் வழங்கப்படும். அனுமதி இலவசம்.ஏற்பாடுகளை, ஸ்டார்ட் அப் பிரிவு மாநிலத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, துணைத்தலைவர் வி.வி.ஆர்.சுப்பிரமணியன், நிர்வாகிகள் செய்துள்ளனர். பங்கேற்க விரும்பும் மாணவர்கள்/தொழில் முனைவோர் www.tnbjpstartup.org/events/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி துரைசாமியை 95006 96989ல் தொடர்பு கொள்ளலாம்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago