| ADDED : ஜூலை 20, 2024 08:31 PM
காங்கேயம்:காங்கேயம் போலீஸ் ஸ்டேசனில் புகுந்து போலீசார் மீது தாக்குதல் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து போலீஸ் விசாரணை வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்த இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த வாலிபர் விஸ்வா என்பவரை போலீஸ் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக நேற்று மாலை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார். அப்போது ஸ்டேசனில் இரண்டு போலீசார் மட்டுமே இருந்த நிலையில், இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் 5 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் திடிரென போலீஸ் ஸ்டேசனில் புகுந்து போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் இரண்டு போலீசார் மற்றும் ஒரு பெண் சப்இன்ஸ்பெக்டர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்தீபன், காங்கேயம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த கோபிநாத், விவேக், விஜய் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயத்தில் பட்ட பகலில் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்கிய வாலிபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.