உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3வது நாளாக தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

3வது நாளாக தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று(ஜூலை 25) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,430க்கும், ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்பனை ஆகிறது. ஜூலை 17ம் தேதி, சவரன் விலை 55,360 ரூபாயாக அதிகரித்தது. பின், விலை சற்று குறைந்தது. கடந்த ஜூலை 22ம் தேதி சவரன், 54,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு வந்தது. சவரனுக்கு அதிரடியாக, 2,200 சரிந்து, 52,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3.10 ரூபாய் குறைந்து, 92.50 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று(ஜூலை 25) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,430க்கு விற்பனை ஆகிறது.சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.51,440க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.52 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SHANTHI P
ஜூலை 25, 2024 15:53

கல்வி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நிறைய குடும்பங்கள் பயன் பெறுவார்கள். வங்கி தினமும் போன் செய்து வட்டி கட்ட சொல்கிறார்கள்.


naranam
ஜூலை 25, 2024 14:39

வாங்குவதையே நிறுத்திவிட்டால், விலை மேலும் குறைந்து விடும்.


S. Narayanan
ஜூலை 25, 2024 12:28

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒரே நிரந்தர சொத்து தங்கம் தான். மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு சிறு வீடு வாங்கினால் அதை உடனே விற்க முடியுமா. ஆனால் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். தங்கம் மற்றும் சொத்து இல்லாத பெண்ணை எத்தனை ஆண்கள் திருமணம் செய்ய முன் வருவர். அதனால் பட்ஜெட்டில் தங்கம் விலை குறைப்பு மிகவும் வரவேற்க வேண்டும்


ராஜ்
ஜூலை 25, 2024 12:24

இதெல்லாம் ஒரு விலை குறைப்பா. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது தங்கம். அரிசியின் விலை குறைத்தால் ஏழைகளுக்கு உதவும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் 78 வரை வரை இருக்கிறது. ஏழைகளுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும். மொபைல் போன் விலையை குறைத்தோம் காருக்கு விலையை குறைத்தோம் தங்கத்தின் வரியை குறைத்தோம் என்று சொல்வது எல்லாம் ஏழைகளுக்கு உதவாது.


Sampath Kumar
ஜூலை 25, 2024 11:42

தங்கம் விலை குறைந்து என்ன பிரயோசனம் ? தங்கத்தை வாங்கி தின்ன முடியுமா? அத்தியாவசிய உணவோ பொருட்களின் விலை குறைந்த பாடு இல்லை ஏந்த அரசு வந்து விலைவாசியை கட்டு படுத்த முடிய வில்லை ஏன்? விவசாயம் தான் காரணம் சுற்று சூழல் காரணமாக விவசாயம் தத்தளிக்கின்றது உற்பத்தி பாதிக்க படுகின்றது இதை தடுக்க அரசிடம் திட்டமுண்டா? ஒரு மண்ணும் இல்லை? சாரும், மொபைலும் வைத்து கொண்டு தின்ன முடியுமா ? நடுதர மக்களின் ஒளத்தி அறியாத இந்த அரசு ஏதற்கு ஆக பணக்காரன் பணக்காரனாக நீடிக்கவுமயவேளை ஏழையாக நிலைக்கவும் நடுத்தரம் நாடு நிலையில் இல்லாமல் தவிக்கவும் தான் இந்த ஆத்தா பட்ஜெட் போட்டு உள்ளது ஒரு சுக்கும் பிரயோசனம் இல்லை


JANA VEL
ஜூலை 25, 2024 12:21

தங்கத்தை வச்சிதான் நட்டு பொருளாதாரம், வளர்ச்சி கணக்கிடப்படுகிறது . உங்கள மாதிரி ஆளுங்களுக்கு குவாட்டர் விலை குறைச்சாலும் ஓசி கேப்பீங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ