உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசு ரூ.1,000த்துடன் வழங்க அரசு முடிவு

பொங்கல் பரிசு ரூ.1,000த்துடன் வழங்க அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கடந்தாண்டு போல, தலா, 1,000 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதன்படி, 2023 பொங்கலுக்கு, 1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.இதனிடையே, 20௨3 செப்டம்பர் முதல் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது.டிசம்பரில் புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 25 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 6,000 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ததால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடும் பாதிப்பை சந்தித்த, 6.81 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 6,000 ரூபாய்; துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, 14.31 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பை எவ்வாறு வழங்குவது; 1,000 ரூபாய் ரொக்கம் இன்றி, அரிசி, சர்க்கரை, வெல்லம், கருப்பு மட்டும் வழங்கலாமா என, அரசு தரப்பில் ஆலோசனை நடந்தது.லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இல்லை என்றால், பொதுமக்களிடம் கடும் அதிருப்தி ஏற்படும் என்று, அரசு கருதியது.எனவே, கடந்த ஆண்டை போலவே, வரும் பொங்கலுக்கும் தலா, 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.பொங்கலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2,000 தர வேண்டும்

அமைச்சர்கள் வலியுறுத்தல்'அனைத்து மகளிருக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை தராதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் வருவ தால், பொங்கல் பரிசு தொகுப்பில், 2,000 ரூபாய் வழங்கலாம்' என, முதல்வரிடம் பல அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.எனவே, ரொக்கம் பணம் எவ்வளவு என்று குறிப்பிடாமல், பொங்கல் பரிசுக்கான கருத்துருவை, உணவு துறையிடம் இருந்து முதல்வர் அலுவலகம் பெற்றுள்ளது. அதனால், கடைசி நேரத்தில், ரொக்க பணத்தை உயர்த்தி அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஆரூர் ரங்
ஜன 01, 2024 14:05

இந்த தடவையாவது மெல்டிங் பாயிண்ட் அதிகமுள்ள உருகாத வெல்லம்????( பூச்சி பல்லி, ஆணி இல்லாத)கொடுப்பீங்களா?


RAMESH
ஜன 01, 2024 13:34

படத்தில் உள்ள பொருட்களில் துண்டு சீட்டோட ஸ்டிக்கர் மிஸ்ஸிங் . முதல்ல அதை ஒட்டுங்கய்யா, இல்லனா பிஜேபி உள்ள வந்துடும்


MAPASE
ஜன 01, 2024 12:00

ஏற்கனவே கடன் சுமை. தமிழக அரசு கஜானாவில் பணம் காலி. இப்போது மத்திய அரசு பணம் அள்ளிக் கொடுத்திருக்கிறது. ...... மத்திய அரசு பணம் அள்ளிக் கொடுத்தது எத்தனை கோடிகள்?


duruvasar
ஜன 01, 2024 11:07

"உங்க அப்பன் வீட்டு காசா எல்லாம் நாங்க கொடுத்த வரிப்பணம் தானே". இந்த பதிவு கார்த்திக் சிதம்பரம் பார்வையின் படி எதுகை மோனையுடன் சொல்லப்பட்டிருப்பதால் யாரும் குறை காணமுடியாது.


Ramesh Sargam
ஜன 01, 2024 08:41

பொருட்கள் வீட்டுக்கு. பணம் அந்த வீட்டில் உள்ள குடிமகன்/குடிமகள் மூலமாக மீண்டும் டாஸ்மாக் வழியாக அரசுக்கே..


Ramesh Sargam
ஜன 01, 2024 08:36

அந்த பணத்துக்கு பதில், ஏதாவது பொருட்கள் கொடுக்கப்பட வேண்டும். இப்படி பணம் கொடுத்து கொடுத்து, மக்களை அடிமையாக்குவது சரியல்ல. மக்களும் பணத்தை மறுத்து, வீட்டு உபயோகத்துக்கு தேவையான பொருட்களை கொடுக்கவேண்டும் என்று கேட்கவேண்டும். மக்களுக்கு அரசு பணம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பதுபோல...


Varadarajan Nagarajan
ஜன 01, 2024 07:04

இந்த செலவுகளை ஈடுகட்ட பத்திர பதிவு கட்டணம், சொத்து வரி, மின் கட்டண உயர்வு என்ற வரிசையில் மேலும் சில பல வரிகள் ஏற்றப்படும் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்


s vinayak
ஜன 01, 2024 06:52

படத்தில் பொருட்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதே?


தமிழ்செல்வன்
ஜன 01, 2024 09:36

படத்தில் மட்டும் நன்றாக இருக்கும் நண்பா


தமிழ்வேள்
ஜன 01, 2024 15:03

பிளாஸ்டிக் தட்டு உங்கள் சொந்த செலவில்தான் வாங்கிக்கொள்ளவேண்டும் ........


Dhandapani
ஜன 01, 2024 06:50

சார் தமிழக அரசின் கடன் அதலபாதாளத்தில் உள்ளது, ஏற்கனவே இலவசபஸ், மகளிர் உரிமைத்தொகை, இப்போ பொங்கல்பரிசு தொகை, எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பது தெரிகிறது, தஞ்சாஊர் பொம்மை அமைச்சர்களை வைத்து என்னசெய்ய, இடிப்பாரும் எடுத்துரைப்பரும் இல்லை, இருந்தாலும் கேட்பாரும் இல்லை, சிவனே என புலம்பவேண்டியதுதான் சார்


J.V. Iyer
ஜன 01, 2024 06:30

ஏற்கனவே கடன் சுமை. தமிழக அரசு கஜானாவில் பணம் காலி. இப்போது மத்திய அரசு பணம் அள்ளிக் கொடுத்திருக்கிறது. நாம் என்ன கணக்கு சொல்வோமா என்ன. தாராளமாக வோட்டிற்க்காக மக்களுக்கு கொடுத்து, வரும் தேர்தலில் எதற்கும் வக்கில்லாத இந்த எம்பீக்களை மீண்டும் வெற்றபெற வழி செய்வோம். திமுக எம்பீக்கள்: மீண்டும் பார்லிமென்டில் கொடிபிடிப்போம், ஒழிக கோஷம் இடுவோம், வெளிநடப்பு செய்வோம். மூத்திர பகுதி என்று கேலிசெய்வோம். மற்ற மாநிலத்தோரை பழிப்போம். நாங்கள் என்ன மக்களுக்காகவா பாராளுமன்றம் செல்கிறோம்? என்று சொல்லும் திமுக எம்பீக்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ