உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " துவேச கருத்துகளை பேசுவதா? "- பிரதமர் மோடி மீது இ.பி.எஸ். முதல் தாக்குதல்

" துவேச கருத்துகளை பேசுவதா? "- பிரதமர் மோடி மீது இ.பி.எஸ். முதல் தாக்குதல்

சென்னை: நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறிய பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக இ.பி.எஸ்., வெளியிட்ட முதல் அறிக்கை இதுதான்.

உகந்தது அல்ல

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம் மக்கள் குறித்த பிரதமரின் பேச்சு தொடர்பாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் தலைவர்கள் மத துவேச கருத்துகளை அரசியலுக்காக தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.

தவிர்க்க வேண்டும்

இஸ்லாமிய மக்களின் மனதை புண்படும்படி கூறப்படும் இதுபோன்ற கருத்துகளை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் தலைவர்களின் சர்ச்சைக் கருத்துகள் சிறுபான்மை மக்களின் மனதில் அச்சத்தை ஏ்றபடுத்துவதுடன், மத உணர்வுகளை தூண்டுகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத துவேச கருத்துகளை நாட்டின் நலனிற்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் இந்திய இயைாண்மைக்கு எதிரானது. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 104 )

Ram
ஏப் 26, 2024 11:01

திரு எடப்பாடி அவர்கள் எப்படியோ ஊர்ந்து பதவி பெற்று இருந்தாலும் நன்றாக இருந்தது ஆட்சி அதுமட்டுமல்ல முதல்வர் பதவியில் இருக்கும் பொழுது ஏகப்பட்ட இன்னல்கள் சமாளித்து வரலாறுதான் அதை அனைவரும் ஏற்றுத்தான் ஆகணும் அவரது பெயர் வரலாற்றில் வந்துவிடும், இன்றும் சில அறிவிலிகள் ஊர்ந்து வந்தார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கத்தான் காலத்தை ஓட்டணும், புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் , சட்டம் ஒழுங்கு நன்றாகத்தான் இருந்தது, தமிழனுக்கு தமிழன்தான் எதிரி,


இந்திய புலி
ஏப் 26, 2024 10:45

ஒருவன் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பினாத்தியபோது என்ன செய்து கொண்டிருந்தது?


சோழநாடன்
ஏப் 25, 2024 12:49

மோடியை எதிர்க்கும் எடப்பாடிக்கு நம் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் தொடரட்டும் மோடியின் மீதான கருத்தியல் தாக்குதல்கள்


Bala Paddy
ஏப் 25, 2024 05:53

மோடி ஜி சொன்னது மன்மோகன் சிங்கின் கூற்றைத்தான் ஆனால் நீ பைத்தியம் என்ன வேணா பேசலாம் பேசாமல் சுடலை டீம்கா உள்ள சேர்ந்துடு


sethu
ஏப் 24, 2024 13:17

அன்னான் எடப்பாடி முதல்வர் பதவியை சுடாலினிடம் கொடுத்து விட்டு அதிமுக தலைவர் பதவியை பெட்ரா சந்தோஷத்தில் நேராக இதுநாள்வரை துபாய்ல சவுதில ஒட்டகம் மேய்ந்துவிட்டு இப்போதுதான் மோடியை குறைசொல்ல நேராக காலத்தில் ஒட்டகத்திலிருந்து குதித்துள்ளார்,அதனால பதவியை கொடுத்தவருக்கு விசுவாசம் இல்லை பதவியை காத்தவருக்கும் விசுவாசம் இல்லை பதவியை நீடிக்க வைத்த பி ஜெ பி க்கும் விசுவாசம் இல்லாத பத்தாசை பிடித்த சிலுக்கலூர் பார்ட்டி ஓன்று உண்டு என்றால் அது இவருதான்


sethu
ஏப் 24, 2024 09:52

ராமர் ஆலயம் இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என கேட்ட ஜெயலலிதாவின் கேள்விக்கும், இந்த கேடுகெட்ட பதவிவெரி பிடித்த பழனிசாமிக்கும் இரட்டை இலை சின்னம் பொருந்தாது மக்களின் மனங்களில் இருந்து இரட்டை இலையை விலக்கவே தி மு க வின் சொல்படி எடப்பாடி நடக்கிறார் துரோகி எட்டப்பர் இவர்


பேசும் தமிழன்
ஏப் 24, 2024 08:05

இந்துக்கள் விழித்து கொள்ள கூடாது... முன்பு போல உப்புக்கு சப்பானியாக இருக்க வேண்டும்....அப்படி தானே ???ஆயிரம் ஓட்டு இருக்கும் இந்து மதத்தை பற்றி யாரும் தவறாக பேசலாம் .....ஆனால் அதே இடத்தில் 100 ஓட்டு இருக்கும் முஸ்லீம்கள் தவறு செய்தாலும் ....அதை கண்டிக்க கூடாது ....அவர்கள் கோபித்து கொண்டு ஓட்டு போட மாட்டார்கள் ....அப்போ இந்துக்கள் மட்டும் எதற்க்கு உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் ???


பேசும் தமிழன்
ஏப் 24, 2024 07:56

பங்காளி திமுக என்ன சொல்ல சொல்கிறதோ அதை தான் இவர் வெளியில் கூறுவார்.. இல்லையென்றால் கொடநாடு கொலை வழக்கு எனும் பாம்பு காலை சுற்றிக்கொள்ளும்.


nv
ஏப் 24, 2024 04:35

ஒரே திராவிட குட்டையில் ஊறிய நாறிய மட்டை


Cheran Perumal
ஏப் 23, 2024 21:46

மன்மோகன் பேசியதைத்தான் மோடி எடுத்துக்காட்டினார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டுப்போங்கள், அதற்காக இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்துங்கள் ஏற்கனவே தொண்டர்களை இழந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று பேசி கட்சியை ஒழித்துவிடாதீர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை