மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
சென்னை: ''சட்டசபை மரபை, அரசியலமைப்பு சட்டத்தை மீறி, கவர்னர் அவரது விருப்பத்தை தெரிவிப்பது முறையல்ல,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார். அவர் அளித்த பேட்டி: கவர்னர் தன் உரையிலிருந்து வாசித்தது வரை, சபைக் குறிப்பில் இடம் பெறும். அவரது சொந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது. சட்டசபை விதிப்படி சட்டசபை நிகழ்வு துவங்கும் போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். உரை நிறைவாக, தேசிய கீதம் இசைக்கப்படும். கவர்னரை அழைத்து, சட்டசபையின் முதல் நாள் கவர்னர் உரையுடன் கூட்டம் துவங்குவது மரபு. பல மாநிலங்களில் கவர்னரை அழைப்பதில்லை. தெலுங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த போது, கவர்னர் தமிழிசையை அழைக்கவில்லை.நம் முதல்வர் சட்டத்தை, மாண்பை மதிப்பவர். சித்தாந்தத்தில் பல வேறுபாடு இருந்தாலும், மாண்பை கடைப்பிடிக்கிறோம். கவர்னர் உரைக்கு கவர்னரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அச்சிடப்படுகிறது. அதில், உண்மைக்கு புறம்பான எந்த செய்தியும் இல்லை. எந்த அரசையும் குறை கூறவில்லை. கேரள கவர்னர், ஒரு பகுதியை வாசித்து விட்டு, கடைசி பக்கத்தை வாசித்து நிறுத்தினார்.அதேபோல நம் கவர்னரும் முடித்தார். கவர்னர், தேசிய கீதம் பாடும் வரை இருக்க வேண்டும். சட்டசபை மரபு மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி, அவரது விருப்பத்தை தெரிவிப்பது முறையல்ல. தமிழகத்தை விட தேசப்பற்று மிகுந்தவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேறு எங்கும் கிடையாது. இந்த ஆண்டு கவர்னரை சந்தித்தபோது, அவர் எதுவும் கூறவில்லை. கவர்னர் உரையை அரசு தயார் செய்யும். அதற்கு ஒப்புதல் பெறுவது அரசு. அரசு ஒப்புதல் அளித்த கவர்னர் உரை வாசிக்க வந்துள்ளது. உரையில் நீக்கச் சொன்ன பகுதியை நீக்கவில்லை என்றால், அதை தெரிவிக்கலாம். அதற்கு பதிலாக, உரையில் உள்ளது ஒன்றும் பிடிக்கவில்லை என கவர்னர் கூறுகிறார்.தேசிய கீதம் இசைக்க வேண்டும் என, கடிதம் கொடுத்தார்; அதற்கு பதில் அளிக்கப்பட்டது. சட்டசபையில் கவர்னர் கூறியது நியாயமா என்று கேட்டேன். உரையில் இல்லாமல், கவர்னர் பேசியதும், நான் பேசியதும் சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39