உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்

பெங்களூரு : கர்நாடக முதல்வர் சித்தராமையா, அரசு சார்பில் வழங்கப்பட்ட இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். அவரது கார் 7 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது 2024 மார்ச் 14ல் சந்திரிகா ஹோட்டல் பகுதியில் சென்றபோதும், அதே ஆண்டு ஆக., 8ல் பழைய விமான நிலைய சாலையில் லீலா பேலஸ் சந்திப்பு அருகிலும், ஆக., 20ல் சிவானந்த சர்க்கிள் பகுதியிலும் காரில் சென்றபோதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். மொத்தம் 6 முறை சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இது அந்தந்த பகுதிகளில் உள்ள நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், 2025 ஜூலை 9ல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் சித்தராமையாவின் காரை டிரைவர் வேகமாக ஓட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர். தற்போது பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சித்தராமையா பயன்படுத்தும் காருக்கு விதிக்கப்பட்ட 7 விதிமீறல்களுக்கும் மொத்தம் ரூ. 2500 அபராதம் செலுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ram
செப் 08, 2025 14:45

தலித் என்று சொல்லிக்கொண்டு நாட்டை சுறண்டி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்


Iyer
செப் 08, 2025 14:12

MUDA - PLOT களை தன் பெயரிலும் தன் குடும்பத்தினர் பெயரிலும் கள்ளத்தனமாக ALLOT செய்துகொண்டவர் இவர். கள்ளத்தனம் பிடிபட்டவுடன் PLOT களை திருப்பிக்கொடுத்துவிட்டு உத்தமர் ஆகிவிட்டார். டெல்லி அம்மாவுக்கு மாதாமாதம் ஒரு பெரிய SUITCASE அனுப்பி வருகிறார். இவரை யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது = DALIT CARD ம் விளையாடுவார். பாரத நாட்டை பிடித்த கிரஹணங்களில் இவரும் ஒருவர்


raju
செப் 08, 2025 13:43

Not bad.


c.k.sundar rao
செப் 08, 2025 09:36

Law makers are themselves Law breakers.


VENKATASUBRAMANIAN
செப் 08, 2025 08:41

இவர்தான் முதல்வர். விளங்கிடும். சட்டம் போடுபவர்களே மீறுகிறார்கள.


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2025 08:36

அரசன் ஆடாவிட்டாலும் அவனின் அடிப்பொடிகள் ஆடுவது அதிகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை