உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரோட்டாவுக்காக ரகளை இருவருக்கு குண்டாஸ்

பரோட்டாவுக்காக ரகளை இருவருக்கு குண்டாஸ்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஓட்டலில் பரோட்டா தீர்ந்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உரிமையாளர் அப்துல் லத்தீப்பை 45, ஜன.,21 இரவு 10:30 மணியளவில் தாக்கினர். அப்துல் லத்தீப் மீது கல்லாப்பெட்டியை தள்ளி சேதப்படுத்தியதுடன் தண்ணீர் டிரம்மில் அமுக்கினர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் லத்தீப் போலீசில் புகார் அளித்தார். அப்துல் லத்தீப் தாக்கப்பட்ட காட்சி வைரலானது.இதில் ஈடுபட்ட சாயல்குடி தமிழரசன் 32, கூரான்கோட்டை சக்திவேல் 31, ஜெகதாபட்டினம் மணிகண்டன் 29, ராஜீவ் காந்தி 28, ஆகியோரை போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் தமிழரசன், சக்திவேல் ஆகியோர்குண்டாஸில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை