உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை!

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை!

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு இடமில்லை என, மறுக்கப்பட்டு உள்ளது. அதிக 'டிமாண்ட்' வைக்கப்பட்டதால், கூட்டணி கதவு மூடப்பட்டதாக, அறிவாலய வட்டாரத்தில் காரணம் சொல்லப்படுகிறது.சட்டசபையில் 29 எம்.எல்.ஏ.,க்கள், 7.9 சதவீத ஓட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்து என, 2011ல் உச்சத்தில் இருந்த தே.மு.தி.க., அதற்கு பிந்தைய தேர்தல்களில் தொடர் சரிவை சந்திக்கத் துவங்கியது. சுயபலத்தை அறியாமல், அக்கட்சி தலைவர்களால் வைக்கப்பட்ட டிமாண்ட் தான் அதற்கு காரணம் என கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=35v55riz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நீடிக்கவில்லை

தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருந்த விஜயகாந்த், தனிக் கட்சி துவங்கி, தனித்து சந்தித்த 2006ம் ஆண்டு தேர்தலில், 8.4 சதவீத ஓட்டுகளை பெற்று, திராவிடக் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தார்.அடுத்த மூன்றாண்டுகளில் தமிழகம் சந்தித்த லோக்சபா தேர்தலிலும் தனித்து களமிறங்கி, 10.3 சதவீத ஓட்டுகளை அள்ளி, அரசியல் சக்தியாக வடிவெடுத்தார். அவரது வளர்ச்சியை, அடுத்து வந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா சரியாக பயன்படுத்திக் கொண்டார்.அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, தி.மு.க.,வை வீழ்த்தி, எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்த விஜயகாந்துக்கு, கூட்டணி உறவு ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. ஆளும் கட்சியை எதிர்த்து நின்றதன் பலனை, சில மாதங்களிலேயே சந்திக்கத் துவங்கினார். தே.மு.தி.க., பிளவுபட்டது; சில எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்தனர்.அடுத்து வந்த, 2014 லோக்சபா தேர்தலில், 5.1 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் 2.4 சதவீதம் என அக்கட்சியின் பலம் இறங்குமுகத்தில் வேகமாக சென்றது. அதிலிருந்து மீள, மீண்டும் அ.தி.மு.க., அணியில் இடம்பெற, 2021 தேர்தலில் தே.மு.தி.க., முயற்சி எடுத்தது. அதிக டிமாண்ட் காரணமாக, அ.தி.மு.க., கழற்றி விட்டதால், அ.ம.மு.க.,வுடன் அணி சேர்ந்து, 60 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்றது. வெறும் 0.43 சதவீத ஓட்டுகளை தான் அக்கட்சியால் பெற முடிந்தது.விஜயகாந்த் மறைவுக்கு முன் நடந்த, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இழந்த பலத்தை பெறப் போவதாக சொல்லி, தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட்டது. ஆனால், 1,115 ஓட்டுகளே கிடைத்தன.

ஆர்ப்பாட்டம்

நிலைமை இப்படி இருக்க, சமீபத்திய விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம், அக்கட்சிக்கு ஆறுதலை தேடித் தரும் வகையில் அமைந்தது.அதையே ஆதாரமாக காட்டி, கூட்டணி பேச்சில் துணிச்சலுடன் இறங்கியிருக்கிறார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா. சமீபத்தில், அ.தி.மு.க., தரப்புடன் பேசியபோது, பிரேமலதா வைத்த டிமாண்ட்களை கேட்டு, பேச வந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், வந்த வேகத்தில் திரும்பி விட்டதாக தகவல்.இப்போது, தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஆளும் தரப்பில் ஒரு 'சீட்' தர ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் என மூன்று தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், பிரேமலதா தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலுார் தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தால், அதுவும் வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்ததாகஅறிவாலய வட்டாரம் சொல்கிறது.இதெல்லாம் சரிவருமா என யோசித்த ஆளும் தி.மு.க., தரப்பு, 'கூட்டணி ஏற்கனவே நிரம்பி வழிகிறது. ஆனாலும் ஏதாவது ஒரு இடம் கொடுக்கலாம் என நினைத்தால், உங்கள் எதிர்பார்ப்பு எங்கேயோ நிற்கிறது; அந்தளவுக்கு இடமில்லை' என கூறி, கதவை மூடி விட்டதாக கூறப்படுகிறது.அதையடுத்தே, 'ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் ஏற்படுத்திய வசதிகளை அழிக்கும் ஆளும் தி.மு.க., அரசு' எனக் கூறி அக்கட்சியை எதிர்த்து, வரும் 20ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் பிரேமலதா என, அக்கட்சி வட்டாரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 22:39

விஜயகாந்த் மறைவுக்கு வந்த கூட்டம் அனைத்தும், அவரது கட்சியினர் அல்ல. ரசிகர்கள். ரசிகர்கள் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொன்று... பொதுவாக சினிமாபிரபலங்கள் என்றால் நாலு சினிமாக்காரங்க வருவாங்க..அவங்களை பார்க்கலாமேன்னு ஒரு கூட்டம் வரும். அதை எல்லாம் தங்களுக்கு சாதமாக நினைத்துக் கொண்டு பிரேமலதா மிதப்பில் இருக்கக் கூடாது. உங்களின் இப்போதைய வாக்குவங்கி வெறும் 0.43 சதவீதம் என்பது கண்கூடான உண்மை. உங்கள் உயரத்துக்கு ஏற்ப ஆசைப்படுங்கள். பேசாமல் பா.ஜனதா அணியிலேயே கைகோர்த்து நில்லுங்கள்..


சோழநாடன்
ஜன 13, 2024 23:11

திமுகவும் தேமுதிகவும் அதிகாரப்பூர்வமில்லாத கூட்டணி பேசியதாவும், அதில் தேமுதிக அதிக இடம் கேட்டதாகவும் திமுக அதனால் கழற்றிவிட்டதாகவும் கதை அளக்கும் தினமலர் ஏன் இந்த நாதரர் கலகத்தைச் செய்யவேண்டும். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்கூட முடிச்சிபோட முடியும் என்று தினமலர் அடித்துவிடும்போலவே இந்த செய்தி உள்ளது. தினமலர் நம்பகமான செய்திகளைத் தர முன்வரவேண்டும். அதுவே ஊடக அறம்.


zakir hassan
ஜன 13, 2024 21:46

கூடா நட்பால் காப்டன் மற்றும் தேமுதிக செத்து சுண்ணாம்பானார்கள் செய்வினை செய்தவளும் செத்து சுண்ணாம்பாகிவிட்டால்


anbu
ஜன 13, 2024 19:41

தேமுதிக என்பது விஜயகாந்த் கையில் அதிகாரம் இருந்த வரைதான். சுதீஷ் , பிரேமா பெட்டிக்கு பேரம் பேசுவதில் கவனமாக நாலு கட்சிகளுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசுவதில் கவனமாக உள்ளார்கள்.


MADHAVAN
ஜன 13, 2024 15:00

குட்டிச்சுவர்,


hari
ஜன 13, 2024 13:48

சேராமல் இருப்பதே நல்லது.......


rsudarsan lic
ஜன 13, 2024 12:00

உண்மையாக சேர வேண்டிய இடம் பாஜக. பார்ப்போம். நடக்க வாய்ப்புள்ளது


Velan Iyengaar
ஜன 13, 2024 12:49

கழுதை கெட்டால் குட்டிசுவரு தான் என்று மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்


Anand
ஜன 13, 2024 14:53

அதுவே திமுகவில் ஐக்கியமானால் புனிதமாகிவிடும்.....


vadivelu
ஜன 13, 2024 14:55

போக போக தெரியும்


Anand
ஜன 13, 2024 14:57

சீரான வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருந்த தேமுதிகவை உசுப்பேத்தி ரணகளமாக்கி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டதே ஊர் உலகம் அறியும்....அடிமை கூட்டம்


ngopalsami
ஜன 13, 2024 11:28

தேமுதிக தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, விஜயகாந்த் அவர்களைப்போல் நற்பணி செய்து கட்சியை மக்களிடத்தில் பெரும்பான்மை அடைய செய்ய வேண்டியது முதல் கடமை. பிரேமலதா இதற்க்கு தன் மகனை பயன்படுத்தலாம். சுதீஷை தவிர்க்க வேண்டும். கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகு தேர்தலை பற்றி நினைக்கவேண்டும். எப்பொழுதும், சேரும் கூட்டம் அப்படியே ஒட்டாக மாறும் என்று நினைப்பது தவறு.


R.PERUMALRAJA
ஜன 13, 2024 11:24

ஒரு காலத்தில் தே .மு .தி . க . கட்சியிர்க்கு என்று தனி செல்வாக்கு இருந்தது , கிராம மக்கள் பலர் திராவிடத்திற்கு மாற்று கட்சியாக பார்த்தனர் , அந்த கட்சி இன்று படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது , படுபாதாளத்திற்கு செல்லவைத்தது விஜயகாந்தின் உடல் நிலையா அல்லது விஜயகாந்தை தவறாக வழிநடத்திய பிரேமலதா / மைத்துனர் சுதிஷா என்று இன்றுவரை புரியாத புதிரே . தேர்தல் நேரத்தில் இங்கும் அங்குமாக தாவினர் . மக்கள் பிரச்சனைகளில் ஒதுங்கி கொண்டனர் . சில இடங்களில் மக்கள் பிரச்சனைகளில் பங்கு எடுப்பதுபோல போல பாவலா காட்டினர் . இன்றய கமல்ஹாசன் கட்சியை போல தே மு தி க நீர்த்து போய்விட்டது .


முருகன்
ஜன 13, 2024 10:57

திமுகவுடன் கூட்டணி வைத்தால் தேமுதிக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் வேறு கூட்டணி என்றால் தோல்வியை தழுவும்


hari
ஜன 13, 2024 13:46

..... திமுகவே ஆப்பு இருக்கு.....


ராஜா
ஜன 13, 2024 21:23

திமுக முதலில் எதனையில் தேறும் என்று பார். மக்கள் வெறுப்புடன் இல்லை மிக அதிக கோபத்துடன் இருகிறார்கள் திமுக மேல்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை