உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை: தேர்தலில் போட்டியிட திட்டம்

கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை: தேர்தலில் போட்டியிட திட்டம்

சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்காக தனது கவர்னர் பதவியை இன்று (மார்ச் 18) ராஜினாமா செய்தார்.தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதற்காக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rfur179w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலில் அவர் பா.ஜ., சார்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தமிழகத்தின் வடசென்னை தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை கவர்னரான தேவேந்திர குமார் ஜோஷிக்கு, புதுச்சேரி துணைநிலை கவர்னராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பதவி?

முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கோவா மாநில கவர்னர் பதவி அளிக்க பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Ramesh Sargam
மார் 19, 2024 06:08

ஒரு சிலருக்கு எப்படியோ, எந்த பதவியிலாவது வருமானம் வந்துகொண்டே இருக்கிறது.


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 05:49

ஆசை யாரை விட்டது ? அரசியல் மன நிம்மதி இல்லாத வாழ்க்கை என்பதை ஏனோ இவர் அறிந்து கொள்ளவில்லை ?


Arasu
மார் 18, 2024 22:32

ஆளுநர் பதவி...அவ்வளவு கேவலமா போச்சு ஆளுநர் பதவிய பிஜேபியை விட வேற யாரும் கேவலப்படுத்த முடியாது


Sathyam
மார் 18, 2024 21:29

இந்த பெண் தமிழிசைக்கு இன்னும் காங்க்ரஸ் டிஎன்ஏ உள்ளது, எனவே அவரது எதிர்பார்ப்பு எப்போதும் நியாயமற்றது, இது பயனற்றது பெண்ணுக்கு 2 எம்.பி. சீட்கள் வழங்கப்படுகின்றன, அது தற்கொலை மற்றும் தவறு என்று நான் 100% உத்தரவாதம் தருகிறேன் பயனற்ற பெண் இரு இடங்களையும் இழக்க மாட்டார், மேலும் வைப்புத்தொகை கூட கிடைக்காது. இந்த பெண் மாநில தலைவராக இருந்த அவர் ஏன் அண்ணாமலை போல் பாதயாத்திரை செய்யவில்லை, எது தடுத்தது, ஏன்? சாவடி நிலை அல்லது கேடர் அளவிலான அமைப்பு இல்லை, சில கூட்டங்களுக்குச் செல்வது, சில ஊடகங்கள் மட்டுமே இருப்பது, சிறியது நேர்காணல்களில், அவர் தனது பதவியை வீணடித்தார், இந்த பெண் புத்திசாலியாக நடந்துகொள்கிறார் என்றால், பாஜக உயர் கட்டளைக்கு தெரியும் இந்த பெண்ணுக்கு எப்படி பாடம் கற்பிப்பது.


Ganesh Shetty
மார் 18, 2024 23:42

இவர் பெண்ணை ? பாட்டி இவரது பயனுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்திகளை பார்த்தவர்,பார்பதர்க்கு டீன் ஏஜ் பெண் போல காணப்படுவார்.இவர் ப ஜ க தலைவர் பதவியில் இருந்த பொது திருச்சியில் மாநாடு நடந்து எப்படி என்றால் காலி நாற்காலிகளுடன் அவ்வளவு பாப்புலர் ஹி ஹி ஹி ..


Sathyam
மார் 18, 2024 21:29

This lady Tamil isai is still Khangress DNA so her expection always is illogical, if this useless lady is offered 2 MP Seats to contest that would be suicial and blunder, I guarentee 100% that this worthless lady would not loose both locations and also may not even get deposit.When this pumpkin lady was president of state why she did not do any padayaathra like K annamalai , whats stopped her , why no booth level or cadre level organization, just going to some meeting , only some media presence, small interviews, she wasted her position and if this lady is be smart then BJP high command knows how to teach this lady lession.


Sathyam
மார் 18, 2024 21:28

பா.ஜ.க சீட் கொடுக்க வேண்டாம் என்று நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன், ஏனெனில் இந்த பெண் பாஜகவுக்கு அட்டகாசமான தோல்வி மற்றும் தோல்வி, கிளர்ச்சி செய்து காங்கிரஸ் அல்லது திமுக அல்லது அதிமுகவில் சேரட்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தலைமைப் பண்புகளைக் கட்டளையிடும் பேச்சு, சாவடி மட்டம் மற்றும் மக்கள் அல்லது குடிமக்கள் அல்லது பணியாளர்களுடன் கூட வலுவான பிணைப்பு போன்ற அடிப்படை குணங்கள் இல்லை.


Sathyam
மார் 18, 2024 21:28

This jealous incapable lady is liability for BJP and utter flop , she has wasted 5 or 6 years as president of BJP TN and not even moved the popularity of BJP to an inch and this lady is very coward, jealous selfish, neither this lady has done any ground work for her constituency. I feel that BJP SHOULD NOT GIVE HER TICKET as that would be utter flop and this lady sure to lose even deposit


Sathyam
மார் 18, 2024 21:27

I strong advise and wish BJP not give ticket to this useless lady as this lady is utter flop and failure for BJP , let her revolt rebel and join Khangress or even DMK or AIADMK but no worries, she will not even get deposit wherever she contest as she lacks basic qualities of leadership commanding speech ground level work , booth level and strong bonding with mass or citizens or even the cadres


Arul Narayanan
மார் 18, 2024 20:02

இவருக்கோ அல்லது விஜயதாரணி சசிகலா புஷ்பா போன்றவர்களுக்கோ சீட்டு கொடுத்தால் கிடைக்க வேண்டிய ஓட்டும் கோவிந்தா.


ramesh
மார் 18, 2024 19:53

தமிழிசை உள்ளதும் போச்சி என்ற பரிதாப நிலையை அடைய போகிறார்


மேலும் செய்திகள்