உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை: வருமான வரித்துறை ஏற்பாடு

24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை: வருமான வரித்துறை ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அறிவித்தார். அதன்படி, வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்கும், தேர்தல் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம். 1800-425-6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 19:08

நாடு முழுக்க வருஷம் முச்சூடும் ரெயிடு உடுறீங்களே ..... என்ன ஏந்தலுக்கு அது ????


Jysenn
மார் 17, 2024 16:42

Distribution of cash for votes has been happening since 1967 and it has ingrained in the minds of candidates and voters of this state and the diravida parties are using this practice to the hilt. The EC is a toothless and impotent organization not competent enough to curb the flow of cash. Unless the flow of cash from the concealed coffers of the diravida parties is contained the election will become no different from the farce staged in countries like Pakistan and Iran. Diravida parties are known to come to power by cash and to sustain that power again with the aid of money.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை