மேலும் செய்திகள்
தவெகவில் இணைந்தார் யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு
3 hour(s) ago | 3
3 ஆண்டுகளில் 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் அரசு தகவல்
11 hour(s) ago | 7
நாகப்பட்டினம்:''சந்துக்குள் ஒளிந்தபடி, 'கண்டா வரச் சொல்லுங்க...' என குற்றவாளிகள் போல் கேட்பது அயோக்கியத்தனம்,'' என, நாகை இந்திய கம்யூ., எம்.பி., செல்வராஜ் ஆவேசப்பட்டார்.தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செல்வராஜ் எம்.பி., கூறியதாவது:தமிழகம் முழுதும் 'கண்டா வரச் சொல்லுங்க...' என போஸ்டர் ஒட்டுபவர்கள், 'எம்.பி.,க்கள் எங்கே?' என கேள்வி கேட்க உரிமையிருக்கிறது. அவர்கள் அப்படி கேட்பதில் நியாயம் உள்ளது. அதை விடுத்து மொட்டை நோட்டீஸ் ஒட்டி, சந்து, பொந்தில் நின்றபடி, 'கண்டா வரச் சொல்லுங்க' என குற்றவாளிகள் போல் கேட்பது அயோக்கியத்தனம்.தைரியம் இருந்தால் நேரிடையாக எம்.பி.,யிடம் வந்து, ஏன் தொகுதி பக்கம் வரவில்லை என கேட்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நாங்கள் மறுக்கவில்லை. மாறாக பொந்துக்குள் ஒளிந்து கொண்டு கேட்கும் அயோக்கியர்களுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 3
11 hour(s) ago | 7