உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்: 25 ஆண்டு ஆட்சி ‛‛பணால்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்: 25 ஆண்டு ஆட்சி ‛‛பணால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இன்று(ஜூன் 05) முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். அவரது 25 ஆண்டு கால ஆட்சியை பா.ஜ., முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். சமீபத்தில் 4 கட்டகளாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் பதவியை இன்று(ஜூன் 05) நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். கவர்னர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரது தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Narayanan Muthu
ஜூன் 05, 2024 18:56

Naveen Patnayak and NCB both stood, in passing anti bills in parliament. BJP washed them out in their states. This two are well deserved.


Diraviam s
ஜூன் 05, 2024 16:41

who said Orissa is a poor state.. Orissa is rich in Coal , Bauxite Aluminium deposits & other rare elements. Central & state together can develop..


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 16:32

பாண்டியனைக் காணவில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 15:38

ஒடிசாவிலுள்ள 21இல் இருபது எம்பி சீட் வென்றதால் பிஜெபி க்கு பெரிய பெரிய பயன் எதுவும் கிடைக்காது. ஏற்கனவே (நவீன் பட்நாயக்கின்) பிஜூ ஜனதா பார்லிமெண்டில் பாரதீய ஜனதாவின் எல்லா சட்டங்கள் தீர்மானங்களையும் ஆதரித்தே வாக்களித்தது. எவ்வித பேரமும் பேசியதில்லை. மிகவும் பிற்பட்ட மாநிலத்தை ஆள்வது கடினம்


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 15:32

தவறான வழிநடத்தலை மதிக்காமல் பாரதீய ஜனதாவுடன் முடிவு செய்த கூட்டணி ஒப்பந்தத்தை செயல்படுத்தியிருந்தால் இந்த கதி ஏற்பட்டிருக்காது. இனியாவது கட்சியையே பிஜெபி யுடன் இணைப்பது நலம்.


r ravichandran
ஜூன் 05, 2024 15:05

நேர்மையான, ஊழலற்ற மனிதர், 10 ஆண்டுகள் மோடி அரசின் அனைத்து மசோதாக்களையும் ஆதரித்து வந்தார். இவரது கட்சி தோல்வி பிஜேபி கட்சி தலைமைக்கு கூட வருத்தம் அளித்து இருக்கும். மோடி இந்த முறை இவருடன் கூட்டணிக்கு முயற்சி செய்தார். ஆனால் நவீன் பட்நாயக் கட்சி அதை ஒப்பு கொள்ளவில்லை.


subramanian
ஜூன் 05, 2024 15:03

இவரின் தேச சேவைக்கு தலை வணங்கு.


s vinayak
ஜூன் 05, 2024 14:07

ஒரு தமிழனால் வந்த தலை குனிவு.


sethu
ஜூன் 05, 2024 15:07

தன்னைத்தானே ஆளத்தெரியாத தமிழன் ஒரிசாவை எப்படி அளத்தகுதி பெறுவான் இப்போது தமிழகத்தை ஆலுவது ஓங்கோல் கும்பல் .தமிழன் இல்லையே .


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 15:28

பலே ஆட்சி


VARUN
ஜூன் 05, 2024 16:41

கல்விஅறிவு இல்லாத உன்னைப்போன்ற வடநாட்டுக்காரன் தமிழன்னை குறித்து பேசுவதற்கு அருகதை இல்லை


Ramanujadasan
ஜூன் 05, 2024 13:21

அது என்ன பணால் ? இங்கே இருக்கும் கொள்ளை கட்சிகள் மறுபடி ஒருமுறை கூட தொடர்ந்து ஜெயிக்க முடியவில்லை . அங்கே அவர் 25 ஆண்டுகளாக ஜெயித்து ஆட்சியில் இருந்து இப்போது விலகுகிறார் . இதை கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை


karupanasamy
ஜூன் 05, 2024 13:14

2026 இல் விடியல் ஆளுநர் ரவியிடம் இப்படித்தான் குடுப்பார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை