மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
2 hour(s) ago
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து, கடந்த அக்.,21ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை விலகியது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில், நான்கு புயல்கள் உருவாகின. அக்டோபரில், அரபிக் கடலில், 'தேஜ்' புயல் உருவாகி, ஏமன் நாடுக்கு சென்றது. வங்கக்கடலில், 'ஹாமூன், மிதிலி' என்ற புயல்கள் உருவாகி, வங்க தேசத்தில் கரையை கடந்தன. 'மிக்ஜாம்' புயல் உருவாகி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை, வருடியதில், அதிகனமழை பெய்தது. மற்றொரு வளிமண்டல சுழற்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது.விலகியது
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து, கடந்த அக்.,21ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை விலகியது. தென் தமிழக பகுதிகளில் வரும் ஜன.,18, 19, 20 ஆகிய தினங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இந்திய பெருங்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago