உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்

ஜன.22ல் சிறுபான்மையினரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்

மதுரை : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது ஜன.22ல் சிறுபான்மையினர் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்'' என பா.ஜ., சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பிரதமர் மோடி ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை பெருவிழாவை தேசத்தின் கலாசார விழாவாக கொண்டாட வேண்டும். அன்று மாலையில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில் தமிழகம் முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் அழைப்பிதழ், அகல்விளக்கையும் வழங்கி, பிரதமர் கருத்தை தெரிவித்து வருகிறோம்.திண்டுக்கல் வியாகுல அன்னை சர்ச் பாதிரியார் செல்வராஜ் உட்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கினோம். மதுரையில் முஸ்லிம் பெண்கள், கிறிஸ்தவ சகோதரர்களிடமும் வழங்கினோம். அனைவரும் விளக்கேற்றுவதாக தெரிவித்தனர்.இத்தருணத்தில் மதநல்லிணக்கத்துக்கு எதிரான தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தவறான பிரசாரத்தை சிறுபான்மை மக்கள் முன்வைத்து, அவர்களை பெரும்பான்மை சமுதாயத்தினருடன் இணையாமல் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. இச்சூழ்ச்சியை முஸ்லிம், கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு தி.மு.க., காங்., கூட்டணியை புறந்தள்ளி, உண்மையான மதநல்லிணக்க அடையாளமான பிரதமர் நரேந்திர மோடி கரத்தை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை