உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தி செல்லும் ஒரு லட்சம் பக்தர்கள்

அயோத்தி செல்லும் ஒரு லட்சம் பக்தர்கள்

சென்னை:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:தமிழகத்தில் இருந்து உ.பி. மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள் கோவை மதுரை கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு செல்ல உள்ளன.தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பயண கட்டணம் உணவு தங்குமிடம் தரிசன கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு மன நிறைவான தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை