உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக.,வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை பதிலடி

அதிமுக.,வை மக்கள் நிராகரித்து விட்டனர்: அண்ணாமலை பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக.,வை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறுகையில், அதிமுக.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். அதிகம் பேசியதே அவர் தான். அண்ணாதுரை, ஜெயலலிதா, இபிஎஸ் பற்றி பேசினார். அதிமுக., பாஜ., கூட்டணி முறிய அண்ணாமலை தான் காரணம். கூட்டணி முறிவு இல்லை என்றால், இப்போது 30 - 35 இடங்கள் கிடைத்து இருக்கும். பா.ஜ.,வினர் கடந்த தேர்தலில் வாங்கியதை விட அண்ணாமலை குறைவாக தான் ஓட்டு வாங்கி உள்ளார். இவ்வாறு வேலுமணி கூறினார்.இதற்கு பதிலளித்து கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தனியாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள், கூட்டணியில் இருந்தால் 30 -35 இடங்களில் வெற்றி பெறலாம் என எப்படி சொல்கின்றனர். வேலுமணியின் பேட்டியை பார்க்கும் போது, அவருக்கும், இபிஎஸ்.,க்கும் இடையே பிரச்னை உள்ளது போல் தெரிகிறது. கூட்டணி முறிந்த போது பல காரணங்களை கூறினர். தற்போது அவர்கள் பேசுவதை பார்க்கும் போது, உட்கட்சி பிரச்னை இருப்பதை காட்டுகிறது.அதிமுக., ஆளுங்கட்சியாக இருந்த போது வெற்றி பெறவில்லை. அதிமுக., தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் அரசியல் வேண்டாம் என மக்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டணியில் உள்ள போது ஒரு பேச்சு. இல்லாத போது ஒரு பேச்சு பேசுகின்றனர். கோவையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் வைத்துள்ள அக்கட்சி, 3 சட்டசபை தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்பு இங்கு அக்கட்சி டெபாசிட் இழந்தது இல்லை. கோவை மக்கள் அதிமுக.,வை நிராகரித்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வேலுமணி போன்றவர்கள் பேசுகின்றனர்.வாய் பேசாத ஆட்டை நடுரோட்டில் வெட்டி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் திமுக.,வினர் வெளியிடுகின்றனர். அவர்களுக்கு என் மீது கோபம் இருந்தால் என் மீது வைக்கட்டும். வாய் பேசாத ஆடு மீது கை வைக்காதீர்கள். 10 ஆண்டுகளாக அதிமுக., ஊழலை மக்கள் பார்த்துள்ளனர். அதனை எடுத்து காட்டுவது என் கடமை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

pmsamy
ஜூன் 07, 2024 07:28

தோத்துட்டு...


vaiko
ஜூன் 07, 2024 01:23

டேய் பத்து பெருசா, இல்லை இருபது பெருசா?


Lakshminarasimhan
ஜூன் 07, 2024 12:28

மற்ற கட்சியை குறை சொல்ல யோகித்தியதை இல்லை


Sakthi Sakthiscoops
ஜூன் 06, 2024 22:19

மக்கள் இவர்களை மறந்து விடாமல் இருக்க, மீடியாக்களில் தலை காட்ட ....அரசியல் செய்ய ஒரு துவக்கம் தேவை. அதைத்தான் செய்கிறார்களோ


s.sivarajan
ஜூன் 06, 2024 22:19

பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஆட்சியில் பங்கேற்க வாய்ப்புள்ள NDA, INDIA இரண்டு கூட்டணியிலும் இல்லாததால் தான் அ. தி. மு. க வுக்கு வாக்கு வீதம் குறைந்திருக்கும்.


INDIAN
ஜூன் 06, 2024 21:54

55 மதிப்பெண் எடுத்தவனும் 45 மதிப்பெண் எடுத்தவனும் சேர்ந்து பரீட்சை எழுதினால் 100 மதிப்பெண் கிடைத்திருக்கும் என்றால் என்ன புரிதலோ அதை தவிர வேறொன்றுமில்லை , அ தி மு க வுக்கு நன்கு தெரியும் பிஜேபி யோடு கூட்டு MP மேப் சீட்டுக்களை மட்டுமல்ல கட்சியையும் ஒரேயடியாக இழக்க நேரிடும் என்ற காரணத்தினால் மட்டுமே ப ஜ க வுடன் சேரவில்லை அதை தவிர்த்து வேறெந்த காரணமும் இல்லை.சென்ற தேர்தலிலே ப ஜ க 5 இடங்களில் போட்டியிட்டு 3.66 சதவிகித வாக்குகளை பெற்றது அதன்படி தற்போது 23 இடங்களில் போட்டியிட்டு 17 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தால் அது கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகதத்துக்கு இணையானது ஆனால் அவர்கள் பெற்றிருப்பது 11 சதவிகித வாக்குகள் மட்டுமே


venugopal s
ஜூன் 06, 2024 21:29

எப்படி இவரால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி எல்லாம் பேச முடிகிறது? பரிட்சையில் ஐந்துக்கு ஐந்து பாடங்களிலும் ஃபெயில் ஆன ஒரு மாணவன் நான்கு பாடங்களில் ஃபெயில் ஆன மற்றொரு மாணவனை கிண்டல் செய்வது போல் உள்ளது!


M.COM.N.K.K.
ஜூன் 06, 2024 19:53

தவறான தகவலை திரு அண்ணாமலை சொல்கிறார் நீங்கள் வாங்கிய வாக்கு என்பது திரு பன்னீர்செல்வம் திரு தினகரன் கூட்டணிக்கு கிடைத்த வாக்கு என்பதுதான் உண்மை.


SWAMINATHAN
ஜூன் 06, 2024 21:38

அதேதான் கூட்டணி வைத்து போட்டியிட்ட தி மு க வுக்கும் பொருந்தும்


veeramani
ஜூன் 06, 2024 18:41

எம் ஜி ஆர் உருவாக்கின கட்சி. எழுபதுகளில் பல தொண்டர்கள் அடிவாங்கி மிதிவங்கி சொந்த பணத்தை சிலவு செய்து கட்டி காப்பேற்றிய கட்சி. எம் ஜி ஆரின் மறைவிற்கு பின்னர் ஜெயா கட்சியானது . ஜெயலலிதா காலத்தில் எழுபதுகளில் கட்சியை வளர்த்தவர்களுக்கு மரியாதை கிடையாது . அவரின் அருமைத்தோழி சொல்லுவதே ஆர்டர் .எம் ஜி ஆரின் விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டனர் , தூக்கி வெளியே எறியப்பட்டனர் . ஆயினும் அவர்கள் இரட்டை இலை சினம் வாக்கு அளித்தனர் . ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இவர்களும் மரியாதை கிடையாது .செங்கோட்டையன், பொன்னையன் போன்றவர்கள் ஏதோ கட்சியில் உள்ளனர். இவர்கள்தான் தாமரைக்கு மாறினார். இனிமேல் இரட்டையிலை சுருங்கலாம் தாமரை பெரியதாக ம லறலாம் முதலில் பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள்.


MADHAVAN
ஜூன் 06, 2024 18:28

அப்புறம் என்ன இதுக்கு அதிமுக கூட்டணி வசிங்க


Jagan (Proud Sangi)
ஜூன் 06, 2024 18:15

கூட்டணி முறியவில்லை என்றால் 30 இல்ல 35 இடம், கூட்டணி இல்லை என்றால் 0. அப்போ பிஜேபி நல்லாவே வளர்ந்திருக்கு மற்றும் பிஜேபி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து விட்டார் பெல் பாய்ஸ் . 2026 ல் கூட்டணி என்றால் பிஜேபி 110 நூற்றிப்பத்து இடம் கேட்க வேண்டும் . 1980 இந்திரா காங்கிரஸ் /DMK கூட்டணி போல்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ