உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 19ல் திருப்பூரில் உரையாற்றுகிறார்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 19ல் திருப்பூரில் உரையாற்றுகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : திருப்பூரில் வரும், 19ம் தேதி நடைபெற உள்ள பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.சென்னையில், 19ம் தேதி நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அன்று மாலை திருப்பூரில் நடக்கவுள்ள பா.ஜ., நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்திற்காக பி.என்., ரோடு, ஆண்டிபாளையம், பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்கள் பார்வையிடப்பட்டுள்ளன.பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாலை, வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் முதல் கட்ட ஆலோசனை நடத்தினர். வரும் 7ம் தேதி, சிறு பூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகள் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. கடந்த, 2ம் தேதி திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாதத்திலேயே பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளதும், திருப்பூரில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதும், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை