உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தனியார் பஸ்கள் கட்டணம் டிச., 30க்குள் உயர்த்த முடிவு

 தனியார் பஸ்கள் கட்டணம் டிச., 30க்குள் உயர்த்த முடிவு

சென்னை: 'தனியார் பஸ்களின் கட்டண உயர்வு தொடர்பாக, டிசம்பர், 30ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. டீசல் விலை உயர்வு, அரசு வழங்கிய இலவச பயண பாஸ் உட்பட பல்வேறு காரணங்களால் , தனியார் பஸ்களின் கட்டணத்தை மாற்றி அமைக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு தனியார் பஸ் ஆப்பரேட்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கட்டண உயர்வு தொடர்பாக, 950 பரிந்துரைகள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, டிசம்பர், 30க்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்ததுடன், அரசு எடுக்கும் இறுதி முடிவை அடுத்த ஆண்டு ஜனவரி, 6ம் தேதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை