உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு

நாளை தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை(டிச.,7) போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்த அரசு இப்படி செயல்படுகிறது. மதசார்பற்ற அரசு என்று கூறுபவர்கள், தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தை எல்லாம் கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ