உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லோக்சபாவில் ராஜா பேச்சு: ஹிந்து முன்னணி கண்டனம்

 லோக்சபாவில் ராஜா பேச்சு: ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்: வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை: நம் நாட்டின் விடுதலை போராட்ட வரலாற்றில், விடுதலை போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக விளங்கியது வந்தே மாதரம் என்ற சொல். மக்களுக்கு உற்சாகத்தை, உணர்ச்சியை, உத்வேத்தை கொடுத்தது இந்த மந்திரம். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை தாங்குவதற்கான மருந்தாக அமைந்தது வந்தே மாதரம். இந்த பாடல் இயற்றப்பட்டதன், 150வது ஆண்டு விழாவையொட்டி லோக்சபாவில் பிரதமர் மோடி, அது பற்றிய கருத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., - எம்.பி. ராஜா, 'வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்க ளுக்கு எதிரானது என்றும், அது இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் தான், காங்கிரஸ் அதை புரிந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை ஏற்று கொள்ளவில்லை,' என பேசினார். இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக காங். - தி.மு.க. மாறி, மாறி அவர்களை தாஜா செய்வதுடன், தேசத்துக்கு எதிரான கருத்துகளையும் சொல்ல வைக்கிறது. வந்தே மாதரத்தின் பெருமையை குலைக்கும் வகையில், லோக்சபாவில் பேசிய ராஜாவுக்கு கடும் கண்டனம் . இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை