உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சசிகலாவுடன் ரஜினி சந்திப்பு

சசிகலாவுடன் ரஜினி சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நேற்று நடிகர் ரஜினி சந்தித்து பேசினார்.சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வீட்டின் எதிரே, அவரது தோழி சசிகலா புதிதாக வீடு கட்டி உள்ளார்.நேற்று அந்த வீட்டில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினார். வீடு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாத ரஜினி, நேற்று சசிகலா வீட்டிற்கு சென்றார்; அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''வீடு கோவில் மாதிரி உள்ளது. இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Vijay D Ratnam
பிப் 25, 2024 22:52

ஒன்னு நொந்து நூலானது. இன்னொன்னு அந்த அவலானது. ரெண்டும் சேர்ந்தால் விளங்கிடும். தெட்சிணாமூர்த்தி திருட்டு ரயிலேறிய அதே திருவாரூர் ஜங்க்ஷனில் இருந்து 80களின் தொடக்கத்தில் புருசனோட ஒரு ட்ரங்க் பெட்டியோட தேர்ட் க்ளாஸ் டிக்கட்டில் வந்த சசிகலா, போயஸ் கார்டனில் 200 கோடி ரூபாய் செலவில் இடம் வாங்கி வீடு காட்டுகிறார் என்றால் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எம்.பி எலக்ஷன் வருது ஒருவேளை மேற்படியானோட டீலிங் முடிஞ்சிடுச்சோ.


Nagarajan D
பிப் 25, 2024 21:46

அந்தம்மா சினிமா எடுக்காது ...எங்கே போனாலும் ஆதாயமில்லாமல் போகமாட்டாயே... என்ன விஷயம்?


venugopal s
பிப் 25, 2024 17:16

நல்லவேளை, தமிழ்நாடும்,தமிழக மக்களும் இவர்கள் இருவரிடம் இருந்தும் தப்பித்து விட்டனர்!


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 25, 2024 19:38

கொதிக்கும் எண்ணெயில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுவதுதான் நாட்டின், நாட்டு மக்களின் தலையெழுத்து என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் .... பாராட்டுக்கள் ... .


Kasimani Baskaran
பிப் 25, 2024 12:43

மாடலுக்காக பங்காளி என்று சொல்லி தூது போயிருப்பாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது...


Viswam
பிப் 25, 2024 12:04

கொல்லன் பட்டறையில் ஈ


PR Makudeswaran
பிப் 25, 2024 10:25

யார் நல்லவன் இறைவா உனக்கே வெளிச்சம்


N. Srinivasan
பிப் 25, 2024 10:24

இதெல்லாம் ஒரு செய்தியாக போடாதீங்க. இனியும் இந்த ஆள் அரசியல் பற்றி பேச அருகதை கிடையாது.....இரண்டும் இப்போது POES தோட்டத்தில் வீடு உள்ள பணம் கொழிக்கும் புள்ளிகள்.......நீ நல்ல இருக்கியா நான் நல்ல இருக்கேனா என பக்கத்துக்கு விட்டு பேச்சு அவ்வளவுதான்.


sankaranarayanan
பிப் 25, 2024 08:57

பெரியம்மா சின்னம்மா இருவர் வீடுகளும் எதிரும் புதிருமாக இருக்கின்றன இனி இந்த புதிய வீட்டில்தான் ஆரம்பம் ஆகும் அரசியல்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 25, 2024 08:51

கூவாத்தூருக்கு ஏம்மா மூன்றெழுத்தை அனுப்புனீங்க... இப்ப பாருங்க சர்ச்சை ஆயிருச்சு ...... அதுக்குப் பேசாம நீங்களே .........


vbs manian
பிப் 25, 2024 08:50

கூட்டணி புயல் அடிக்கும் இந்த நேரத்தில் மசாலா இல்லாமல் இருக்குமா.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை