உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிடி தமிழ் சேனலில் ராமர் கோயில் நேரலை: எல்.முருகன் தகவல்

டிடி தமிழ் சேனலில் ராமர் கோயில் நேரலை: எல்.முருகன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று (ஜன.,19) பிரதமர் மோடி, புதிய வடிவிலான டிடி தமிழ் தொலைக்காட்சி சேனலை துவக்கி வைக்கிறார். அந்த சேனலில், ஜன.,22ல் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.தமிழகம் வரும் பிரதமர் மோடி, இன்று (ஜன.,19) மாலை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து டிடி பொதிகை தொலைக்காட்சி சேனலை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: டிடி பொதிகை தொலைக்காட்சி ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய வடிவிலான டிடி தமிழ் தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு தொடங்க உள்ளது. எல்லைப்புற கிராமங்களுக்கும் அரசின் தகவல் ஒளிபரப்பு சேவைகள் கிடைக்கும் வகையில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி