உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மசூர் பருப்பை வாங்கியிருந்தால் ரூ.200 கோடி மிச்சமாகி இருக்கும்: அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கெடு

மசூர் பருப்பை வாங்கியிருந்தால் ரூ.200 கோடி மிச்சமாகி இருக்கும்: அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கெடு

சென்னை: மசூர் பருப்பை கொள்முதல் செய்திருந்தால், 200 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும் என்பதால், பொது வினியோக முறையில், மசூர் பருப்பை வினியோகிக்க கோரிய மனு மீது, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:பொது வினியோகத்தில் மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டு, பின், அது வாபஸ் பெறப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேசரி பருப்பு கலக்காமல், மசூர் பருப்பு வழங்குவதை உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதர பருப்பு வகைகளை ஒப்பிடும் போது, மசூர் பருப்பின் விலை குறைவானது. பொது வினியோக திட்டத்தில், மசூர் பருப்பை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மத்திய நுகர்வோர் துறைச் செயலர் கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் அனுப்பி உள்ளார்.மத்திய அரசின் கடிதத்தை பரிசீலிக்க, அரசு தவறி விட்டது. கடந்த ஜனவரியில், 9,000 டன் கனடா மஞ்சள் பருப்பை, கிலோ 129.65 ரூபாய்க்கு வழங்க ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.மசூர் பருப்பை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்திருந்தால், 45,000 டன்னுக்கு, 382 கோடி ரூபாய் தான் செலவாகி இருக்கும். ஆனால், 45,000 டன், கனடா மஞ்சள் பருப்பை, 583.42 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர். இரண்டுக்கும், 200.92 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது.டெண்டரில் மசூர் பருப்பை சேர்த்திருந்தால், அரசின் நிதிச்சுமை கணிசமாக குறைந்திருக்கும். எனவே, பொது வினியோக திட்ட முறையில் வழங்கவும், வரும் காலங்களில் அறிவிக்கப்படும் டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவும் கோரி, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''மனுதாரர் மேற்கோள்காட்டிய ஆவணங்களின்படி மனுவை பரிசீலிக்க உத்தரவிடுவது தான்உகந்ததாக இருக்கும்.''எனவே, மனுதாரர் தரப்பை கேட்டு, எட்டு வாரங்களுக்குள் சட்டப்படியான உத்தரவை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலர் பிறப்பிக்க வேண்டும்,'' என,உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 12:47

மசூர் பருப்பு உடல்நலனுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து தமிழகத்தில் பரவலாக உண்டு ..... பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பார்த்தால் அளவோடு சேர்த்துக்கொண்டால் பிரச்னை இல்லை என்றுதான் சொல்லப்ப்பட்டுள்ளது (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லதாம்) ..... வேண்டியவர்கள் சேர்த்துக்கொள்ளலாம் ..... வேண்டாதவர்கள் புறக்கணிக்கலாம் .....


Sampath
பிப் 17, 2024 10:42

What an intelligent way of swindling Government


Yes your honor
பிப் 17, 2024 10:21

ஜியோ பாலிடிக்ஸ் சார்ந்து சில நேரங்களில் அரசு சில முடிவெடுக்க வேண்டியிருக்கலாம். நீதிமன்றங்கள் மத்திய அரசின் செயல்பாடுகளில் யோசித்து திருப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2024 09:21

கடலெண்ணெய்க்கு பதில் கடுகு எண்ணெய், துவரம் பருப்புக்கு பதில் மசூரு, அரிசிக்கு பதில் கோதுமை, தமிழுக்கு பதில் இந்தி..


Yes your honor
பிப் 17, 2024 10:26

மிக அருமையான யோசனை. நாம் அனைவரும் இன்றே இந்தி மொழியை கற்றுக் கொள்வோம், உறுப்படுவோம். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், பாரத் மாதா கி ஜெ.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2024 09:18

கனடா மஞ்சள் பருப்பு துவரம் பருப்பு வகை. மசூர் பருப்பை தமிழ்நாட்டில் யாரும் பயன்படுத்துவதில்லை. வடக்கே இருந்து வந்த கூட்டத்தை தவிர.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 12:44

என் உணவு ..... என் உரிமை ன்னு உருட்டுன கும்பலை சேர்ந்தவன் நீயி ..... யாரு எதை ஏத்துக்கிட்டா உனக்கென்ன ????


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2024 09:16

பருப்பை தமிழ்நாட்டில் எந்த மசூரும் சாப்பிடுவதில்லை என்பது கணம் கோர்ட்டாருக்கு தெரியாதோ?


தமிழ் மைந்தன்
பிப் 17, 2024 08:44

அந்த இறுநூறு கோடியில்தான் பழனி அருகே எண்பது ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது புதிய பழனி மாவட்டம் வந்தால் ஆட்சியர் அலுவலகம் கட்ட பத்து ஏக்கர் இலவசமாக கொடுத்து எழுபது ஏக்கரை நல்ல விலைக்கு விற்க. இதுவே திராவிட ஊழல் மாடல்


sankar
பிப் 17, 2024 08:41

மண்ணின் மைந்தன் தொரம்பருப்பு அந்நினையன் மாசூர் பருப்பு எதுக்கு . பாசிப்பருப்பு தான் உடம்புக்கு நல்லது . டாஸ் மார் இருக்கும்போது மசுர் பருப்பெ எதற்கு என்று யோசித்திருப்பார்களோ ??????????????


வீரா
பிப் 17, 2024 08:32

கன்னட பருப்பு மைசூர் பருப்பை கன்னட நாயக்கர் திராவிட மாடல்அரசு "கனடா பருப்பு மசூர் பருப்பு" என்று வியாபாரம் செய்கிறதா?


J.V. Iyer
பிப் 17, 2024 07:27

பின்னே எப்படி திருட்டு மாடல் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது? கமிஷன் வேண்டாமா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை