உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம்; புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம்; புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று(ஏப்ரல் 24) புட்டபர்த்தியில் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kowqrlym&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மகோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உண்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய மனித விழுமியங்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நாள் கொண்டாடுகிறது.ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மகோற்சவத்தை முன்னிட்டு, பகவானின் கல்வி நிறுவனங்களின் மாணவர்களும், ஊழியர்களும் கூட்டாக தங்கள் மனமார்ந்த நன்றியை ஆத்மார்த்தமான பாடல்கள் மூலம் வழிபட்டனர்.'தெய்வீகத்தைத் தவிர வேறெதுவும் நிரந்தரமானது இல்லை. நம் அன்பினால் அவனை அடைய வேண்டும்' என்று பகவான் வலியுறுத்தினார்.சத்ய சாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.பஜனைகளை தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை