மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 24
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் அனுபவித்தனர்.கொடைக்கானலுக்கு சில வாரங்களாக பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிரையன்ட் பூங்கா புல்வெளியில் விளையாட்டு உபகரணங்களுடன் மாணவர்கள் பொழுதை போக்குகின்றனர். ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரியில் படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மாணவர்கள் மகிழ்ந்தனர்.பொங்கல் பண்டிகைக்கு முன் வெளுத்து வாங்கிய மழையால் மலை நகரில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது. தற்போது பகலில் சுட்டெரிக்கும் வெயில், மாலையில் பனியின் தாக்கம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. இதை அனுபவிக்க பள்ளி அளவிலான சுற்றுலாவில் மாணவர்கள் ஏராளமானோர் இங்கு முகாமிட்டுள்ளனர்.
4 hour(s) ago | 24