உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி 3வது முறையாக மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி 3வது முறையாக மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், ஜாமின் கேட்டு இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இன்று மீண்டும் ஜாமின் கேட்டு செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி அல்லி, மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜன.,8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ரமேஷ் VPT
ஜன 04, 2024 04:30

செந்திலுக்கு ஜாமீன் கிடைகக்கூடாது, கொடுக்கவும் கூடாது. உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி, இதற்கு செந்தில், பொன்முடி போன்றவர்கள் விலக்கல்ல.


J.Isaac
ஜன 03, 2024 18:37

நிச்சயமாக கொன்று விடுவார்கள்


DVRR
ஜன 03, 2024 16:49

2 + 3 எவ்வளவுங்க??ஏன் அது 5 தான். இல்லவே இல்லை சட்டம் அந்த மாதிரி சொல்லாது. சட்டம் என்ன சொல்லும் 5 என்பதற்கு ஆதாரம் இல்லை. கீழ் நீதி மன்றம் தீர்ப்பு சொன்னால் அதை உயர் நீதிமன்றம் மாற்றும். உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் அதை உச்ச நீதிமன்றம் மாற்றும்.


N.Purushothaman
ஜன 03, 2024 15:45

இ இ அமைச்சரின் முயற்சி வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் ...


ராமகிருஷ்ணன்
ஜன 03, 2024 15:16

சின்ன அணிலுக்கு சங்கு ஊதிட்டாங்க என்று தகவல் வருகிறது. பெரிய அணிலு அப்ரூவராக வாய்ப்பு உள்ளது.


Raa
ஜன 03, 2024 14:40

அதெப்படி 2 ஜாமீன் நிராகரிப்புக்கு பிறகு என்ன ஒழுக்க சீலர்கள் ஆகிவிட்டனர், மீண்டும் ஜாமீன் கேட்க? ஒரு முறை இல்லை என்றால் எப்போதுமே இல்லைதானே? மாசத்துக்கு மாசம் சட்டம் மாறுமா என்ன?


Dharmavaan
ஜன 03, 2024 17:20

கேவலமான சட்டம்


J.Isaac
ஜன 03, 2024 14:38

இப்படியே இழுத்தடித்து


Anand
ஜன 03, 2024 16:44

சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டியது தான்


Varadarajan Nagarajan
ஜன 03, 2024 13:23

அமலாக்கத்துறை ஏன் இன்னும் திகார் சிறைக்கு மாற்றாமல் காலதாமதம் செய்கின்றனர். அங்கு இடப்பற்றாக்குறையா?


ஆரூர் ரங்
ஜன 03, 2024 14:08

குற்றம் நடந்த மாநிலத்தில்தான் சிறை வைக்கலாம்.????


Dharmavaan
ஜன 03, 2024 17:21

எந்த சட்டத்தின்படி


Godyes
ஜன 03, 2024 13:16

நீதிபதிக்கு நீதிபதி சட்டம் மாறுமா.அளித்த தீர்ப்பும் மாறுமா.


Anand
ஜன 03, 2024 13:08

இவனோட தம்பி என்னவானான்? நிரந்தரமா தலைமறைவாகிவிட்டானா? அவன் சிக்கினால் தான் இவனுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புண்டு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை