சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, சென்னை, திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலியில் இருந்து, டிச., 3ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை செல்லும். அங்கிருந்து டிச., 4 இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும் சென்ட்ரலில் இருந்து, டிச., 3, 4ம் தேதிகளில், காலை 9:15 மணிக்கு புறப்படும் சர்குலர் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம், எழும்பூர் வழியாக இரவு 7:00 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் முன்பதிவு இல்லாத ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிச., 3, 4, 5ம் தேதிகளில், காலை 10:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் காலை 11:45 மணிக்கு, திருவண்ணாமலை செல்லும். அங்கிருந்து, வரும் 30, டிச., 3, 4, 5ல் பகல் 12:40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத ரயில், மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் செல்லும் விழுப்புரத்தில் இருந்து, டிச., 3, 4, 5ல் இரவு 10:40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 1:45 மணிக்கு, வேலுார் கண் டோன்மெண்ட் செல்லும். அங்கிருந்து டிச., 4, 5, 6ம் தேதிகளில், அதிகாலை 2:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 5:00 மணிக்கு விழுப்புரம் செல்லும் தாம்பரத்தில் இருந்து டிச., 3, 4ம் தேதிகளில், காலை 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:30 மணிக்கு, திருவண்ணாமலைக்கு செல்லும். அங்கிருந்து வரும் டிச., 3, 4ல் மாலை 5:00 மணிக்கு புறப்படும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 9:00 மணிக்கு, தாம்பரம் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.