உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை செயலர் திடீர் மாற்றம்

தலைமை செயலர் திடீர் மாற்றம்

சென்னை : தமிழக அரசின், 49வது தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ல் பொறுப்பேற்றார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவதாக அரசாணை வெளியானது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜியரிங் பட்டதாரி; 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். பல்வேறு பதவிகளை வகித்த சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 19, 2024 11:57

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக திறம்படப் பணியாற்றி ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு அனைத்து உதவிகளையும் அனுமதிகளையும் கண்களை மூடிக்கொண்டு அள்ளித்தருவார் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ