உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை

தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை

தர்மபுரி : ''தொடர் தோல்விக்கு பின்னரும், மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை; தமிழக திட்டங்களுக்கு நிதி தர மறுக்கிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில் ஊரகப் பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 2,637 பேருக்கு, 56 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். அமைச்சர் நேரு, கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தனர்.

உறுதி அளித்தேன்

ஸ்டாலின் பேசியதாவது:சட்டசபை தேர்தலுக்கு முன், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்தித்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் மக்களிடம் மனுக்கள் பெற்றேன். ஆட்சி அமைத்த 100 நாட்களில் சாத்தியமானவற்றை செய்வோம் என உறுதி அளித்தேன். 'தி.மு.க., ஆட்சிக்கும் வராது; பெட்டியையும் திறக்காது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஆட்சியில் அமர்த்தினர். உடனே, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற துறையை உருவாக்கி, அதன் வாயிலாக, 2 லட்சத்து 29,216 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வர் உதவி மையம், ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் மேலாண்மை அமைப்பு இவற்றுடன், 'முதல்வரின் முகவரி' துறையை உருவாக்கி, இவற்றை ஒருங்கிணைத்து உள்ளோம்.

தீர்வு எவ்வளவு?

மக்கள் பிரதிநிதிகள் யாரிடம் மனு கொடுத்தாலும் ஒரே இடத்திற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். மக்களின் அனைத்து கோரிக்கைகளும் தலைமை செயலகத்திற்கு வந்து விடுகின்றன.இந்த துறை வாயிலாக, 68 லட்சத்து 30,281 மனுக்கள் பெறப்பட்டு, 66 லட்சத்து 25,3௦4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 72,438 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களை பொதுமக்கள் சந்திப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, அதிகாரிகளே மக்களிடம் சென்று மனு வாங்குவது தான், 'மக்களுடன் முதல்வர்' திட்டம். நகர்ப்புறங்களில் செயல்படுத்திய இத்திட்டம், இரண்டாம் கட்டமாக இன்று ஊரகப் பகுதிகளிலும் துவக்கப்படுகிறது. 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் வாயிலாக இதுவரை, 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எரிச்சல்

சொல்வதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து வருகிறோம். இது, எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. எங்கள் மீது அவதுாறு பேசி, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர். தொடர் தோல்விக்கு பின்னரும், மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழக திட்டங்களுக்கு நிதி வழங்க இன்னும் அதற்கு மனம் வரவில்லை. நல்ல குணம் வரவில்லை. ஒப்புக் கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை கூட தர மறுக்கிறது. இனியாவது யார் மீதும் விருப்பு, வெறுப்பின்றி மத்திய அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், தர்மபுரி எம்.பி., மணி, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புரட்சியாளர் ஸ்டாலின்

முதல்வராக பொறுப்பேற்ற பின், தர்மபுரி மாவட்டத்திற்கு நான்காவது முறையாக ஸ்டாலின் வந்துள்ளார். சிப்காட் அமைத்து தொழில் துறையை வளர்த்து வருகிறார். ஓசூர் போல தர்மபுரியும் வளர்ச்சி பெறும். தற்போது, 1.18 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி புரட்சியை ஏற்படுத்தி உள்ளதால், முதல்வர் ஸ்டாலினும் ஒரு புரட்சியாளர் தான்.-பன்னீர்செல்வம்வேளாண் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

panneer selvam
ஜூலை 13, 2024 19:11

Stalin ji , any major infrastructure projects where foreign funds / loans involved , there will be financial agreement between various parties it is called financial closure . So certainly there will be a defined financial agreement on Chennai Phase 2 metro projects . If any party violates these agreements , it shall be notified in advance to all others . So Stalin ji if Central government did not follow to their agreement of fundings , please highlight it with evidence , so that anyone could approach Supreme Court for fair justice . Just a stage show and mere announcement not backed with evidence will not hold water . Please explain the financial closure of Chennai Metro Phase 2 project fundings immediately .


xyzabc
ஜூலை 13, 2024 11:07

In crisis, blame the centre otherwise it does not matter for the votes. Dravida model.


Anbuselvan
ஜூலை 12, 2024 23:33

ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால் நேர்மையாக நடக்கிறார்கள் என நடுவண் அரசு நினைத்து இருக்குமோ என்னவோ


sankaranarayanan
ஜூலை 12, 2024 22:38

முன்பே மாநாடு முடிந்ததும் கணக்கு கேட்ட எம் ஜி ஆருக்கு பதில்சொல்லாதால்தான் இன்னொரு கட்சியே உருவானது நினைவிருக்கட்டும் இப்போது ரூபாய் நாலாயிரத்துக்கு மத்திய அரசு கணக்கு கேட்டால் பதிலே இல்லை அதைத்தவிர மற்ற எல்லா தகவல்களும் வெளி வருகின்றன மக்கள் புரிந்துகொண்டால் சரி


J.Isaac
ஜூலை 13, 2024 18:31

பி எம் கேர் கணக்கு என்ன ஆனது?


Jai
ஜூலை 12, 2024 22:25

அது என்ன தொடர் தோல்வி? 28 கட்சிகள் ஒன்றாக சேர்ந்தும் ஒற்றை கட்சி பாஜக அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. யாருடைய தோல்வி இது?


lana
ஜூலை 12, 2024 21:26

சென்னை வெள்ளம் நீர் வடிகால் க்கு 4000 கோடி கொடுத்தா ர்கள்.என்ன நடந்தது. 99% பணி முடிந்தது என்று கதை விட்டார்கள். இவிங்க பொய் சொன்னது வருண பகவான் க்கே ஏற்க வில்லை . இன்று வரை அதுக்கு கணக்கு இல்லை. விவசாயிகள் 2000 உதவி தொகை இங்கு மட்டும் போலி விவசாயிகள் க்கு செல்கிறது. உங்கள் இலட்சணம் தெரிந்து தான் அவர்கள் கணக்கு கேட்கிறார்கள். அதை கொடுத்து விட்டு கேள்வி மற்றும் நிதி நீதி எல்லாம் கேட்கவும்


lana
ஜூலை 12, 2024 21:26

சென்னை வெள்ளம் நீர் வடிகால் க்கு 4000 கோடி கொடுத்தா ர்கள்.என்ன நடந்தது. 99% பணி முடிந்தது என்று கதை விட்டார்கள். இவிங்க பொய் சொன்னது வருண பகவான் க்கே ஏற்க வில்லை . இன்று வரை அதுக்கு கணக்கு இல்லை. விவசாயிகள் 2000 உதவி தொகை இங்கு மட்டும் போலி விவசாயிகள் க்கு செல்கிறது. உங்கள் இலட்சணம் தெரிந்து தான் அவர்கள் கணக்கு கேட்கிறார்கள். அதை கொடுத்து விட்டு கேள்வி மற்றும் நிதி நீதி எல்லாம் கேட்கவும்


Velan
ஜூலை 12, 2024 20:23

பிசேபி உடன் கூட்டனி வைத்தால் கிடைக்கும்


PREM KUMAR K R
ஜூலை 12, 2024 20:14

தமிழகத்திற்கு நிதி தர மத்திய அரசிற்கு மனமில்லை என்று அரசியல் பொடி கலந்து தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். தெரிந்தே விஷ சாராயம் குடித்து மரணமடைந்த குடும்பங்களுக்கு மக்களின் வரி பணத்திலிருந்து மனிதாபிமானம் என்ற பெயரில் பத்து லட்ச ரூபாய் வாரி கொடுத்ததை நீதிமன்றம் கண்டித்ததை இவ்வளவு விரைவில் முதல்வர் மறந்து விட்டாரோ? தி.மு.க.வோ அல்லது அந்த கட்சியை சில தொகுதி களுக்காக ஜால்ரா அடித்து ஆதரிக்கும் கட்சிகளும் இதை போன்ற அவசியமற்ற செலவுகளுக்கு தங்களது சொந்த கட்சி பணத்திலிருந்து கொடுத்து அவர்களது மனிதாபிமானத்தை காட்டுவது தான் நியாயமாக இருக்கும். அதை விடுத்து மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என கூறுவதன் மூலம் தமிழக மக்களை மத்திய அரசிற்கு எதிராக திருப்பும் செயல் தேவை தானா ? நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. போன்ற மாநில கட்சிகளின் வெற்றியால் தான் அந்த கூட்டணிக்கு மூன்று இலக்க தொகுதி, களும் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமாக இந்த கட்சிகளின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி கேட்க முடியாது. ராகுல் உள்பட எந்த கட்சி முண்ணனி தலைவர்களும் கருத்து கூற தடை செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே தான் கள்ளக்குறிச்சிக்கும் மாயாவதி கட்சி மாநில தலைவர் கொடுரமாக கொலை செய்யப்பட்டதால் சென்னைக்கும் கூட எந்த கட்சி தலைவர்களையும் வரவிடாமல் தி.மு.க. தடுத்து வருகிறது.


ramesh
ஜூலை 12, 2024 21:10

பிறகு எதற்கு தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து கொடுக்க மனம் இல்லாத மத்திய அரசு வரி வசூலிக்க வேண்டும் .


Gajageswari
ஜூலை 12, 2024 19:19

கள்ளச்சாராயம் ₹10லட்சம் கொடுக்கும் அளவு பணம் உள்ளது என்று நினைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை