உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவு பொருட்களை அடைத்து விற்பனை செய்ய நீங்கியது தடை

உணவு பொருட்களை அடைத்து விற்பனை செய்ய நீங்கியது தடை

சென்னை: பால், எண்ணெய், பால் பொருட்கள், பிஸ்கட்டுகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க விதிவிலக்கு அளித்ததை, வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.ஒரு முறை பயன்படுத்தும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு விதித்த தடையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.'இந்த தடை உத்தரவு செல்லும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வு உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.அரிசி, பருப்பு, பால், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை, 2020ல் அரசு வாபஸ் பெற்றது. இதை எதிர்த்து, பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சாமிநாதன், வழக்கு தொடர்ந்திருந்தார்.தினசரி பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைப்பதால், அதற்கு தடை விதிப்பது சாத்தியமில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கட், மருந்து பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதால், 2020ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை. 'அதனால், தடை உத்தரவை மாற்ற, அனுமதி அளிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, ''தினசரி பயன்படுத்தும் பொருட்களை, பிளாஸ்டிக் உறையில் அடைத்து விற்பதை தடுப்பது சாத்தியமில்லை. அதனால், ஏற்கனவே அளித்த விதிவிலக்கை தொடர, அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்ய, விதிவிலக்கு அளித்த உத்தரவை வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து, அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க, தடை நீங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Varadarajan Nagarajan
ஜன 04, 2024 18:43

சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் நடைமுறையில் பின்பற்றக்கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை செயல்படுத்தமுடியும். இல்லையேல் பேரளவுக்கு மட்டுமே அவை இருக்கும். விதிமீறல்கள்தான் அதிகரிக்கும். ஆறு குளங்களிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, தற்பொழுது விவசாய தேவைக்குக்கூட வண்டல் எடுப்பது, தூர் வாருவதென்பது முடியாமல் போய்விட்டது. காவல் துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, போக்குவரத்து துறை போன்ற பல அரசு துறைகளும் இதில் தலையிட்டு குட்டிச்சுவராக்குகின்றன. குளம் குட்டைகளில் செய்யவேண்டிய சாதாரண தூர் வாரும் பணியைக்கூட செய்யமுடியவில்லை.


ராஜா
ஜன 04, 2024 18:04

திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் தெருக்களில் சர்வ சாதாரணமாக கொழுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கேன்சர் நோய் இலவசம். அரசு பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்


g.s,rajan
ஜன 04, 2024 11:09

More Plastics ,More Pollution....


duruvasar
ஜன 04, 2024 09:36

அய்யா, இப்படி சாத்தியமில்லை என்ற வாதம், சட்டத்திற்க்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்துமா? சாத்தியமில்லை எனக்கூறி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் சத்தியமாக பின்வரும் சந்ததியினர் இந்த உலகில் வாழ்வது சாத்தியமில்லாமலேயே போய்விடும். இன்று வழக்கு தொடுத்தவர்கள், வாதாடியவர்கள், தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் என யாரும் வாழ்ந்து பிற்காலத்தில் வரப்போகிற அவலத்தை பார்க்கபோவதில்லை.


ஆரூர் ரங்
ஜன 04, 2024 09:12

எல்லாக் கடைகளிலும் மறுசுழற்சி செய்ய வசதியாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளை திரும்ப எடுத்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.அதற்காக கடைகளில் தனி டப்பா வைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்கவே முடியாது.


அப்புசாமி
ஜன 04, 2024 08:41

மஞ்சப்பை.இயக்கம்னு சொல்லி பல கோடிகளை சுருட்டியாச்சு. இனிமே என்ப நடந்தால் என்ன? அடுத்த மழை சீசனில் வெள்ளம் வரும் வரை ப்காஸ்டிக் தயாரிப்பாளர்களிடமிருந்து கமுஷன், ஆட்டை எல்லாம். இதுவரை பறிமுதல்.பண்ணி பதுக்கி வெச்ச ப்ளாஸ்டிக்ஜையெல்காம்.குடுக்காம அவிங்களெ வித்து வாயிலே போட்டுக்குவாங்க.


Seshan Thirumaliruncholai
ஜன 04, 2024 07:54

வியாபாரம் முக்கியம் அல்ல. உடல் நிலைக்கு கெடுதல் இல்லை என்பதற்கு என்ன உத்திரவாதம்? பிளாஸ்டிக் நீர் நிலை வழிப்பாதையை அடைக்கும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டதா என்று தெரியவில்லை. பிளாஸ்டிக் உரையில் தரமற்ற பொருள்கள் அடைந்திட நிலை ஏற்படும்.


R S BALA
ஜன 04, 2024 07:44

உண்மைதான் இனி சில விஷயங்கள் மாறுவதற்கு சாத்தியமே இல்லை.. எனது சிறு வயதில் மளிகை கடைக்கு செல்லும்பொழுது ஒரு ஏழு எட்டு துணிப்பை எடுத்து சென்ற அனுபவம் உண்டு பால் எண்ணெய்கள் வாங்குவதற்கும் பாத்திரங்கள் கொண்டு செல்வோம், தண்ணீர் மண்குடுவையில்..அதெல்லாம் ஒரு கனாக்காலம்.


Ramesh Sargam
ஜன 04, 2024 07:31

பிளாஸ்டிக் நம் வாழ்வோடு கலந்துவிட்டது. அதை பிரிக்க இயலாது. மக்கள் தாமாகவே பிளாஸ்டிக் பொருட்கள் உபயயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை