உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தில் விழுந்து 5 அடி பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள்: எரிகல்தான் என உறுதியானது

நிலத்தில் விழுந்து 5 அடி பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள்: எரிகல்தான் என உறுதியானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நிலத்தில் திடீரென மர்ம பொருள் விழுந்து ஐந்து அடி அளவிற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. நிலத்தில் விழுந்து பள்ளத்தை ஏற்படுத்தியது எரிகல் தான் என மாவட்ட அறிவியல் அலுவலர்கள் உறுதிப்படுத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k22fvsuc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்மப் பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது, பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளத்தில் இருந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும், இன்று மாவட்ட அறிவியல் அலுவலர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது நிலத்தில் விழுந்து பள்ளத்தை ஏற்படுத்தியது எரிகல்தான் என அவர்கள் உறுதிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
மே 27, 2024 22:30

விடியலின் ஆட்சியில் விழுந்ததால் அந்த கல் கட்டுமரம் குடும்பத்தினருக்கு சொந்தமா கிறது. நல்ல விலைக்கு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


பச்சையப்பன் கோபால் புரம்
மே 27, 2024 19:38

ஆக ஆக ஆஹா!! எங்கள் தளபதியின் ஆச்சியை பாராட்டியும் சூன் 4ம் தேதி மரத்த தமிழகத்தின் இளவரசராக பதவி ஏற்க்க இருக்கும் எங்கள் ஊதய்ணாவை ஊக்கப் படுத்தவும் விண்ணுலகிலிருந்து தேவனால் அனுப்பப் பட்ஞ அன்பு பரிசு அந்த எஏரி விண்மீன். ஆக ஆக ஆஹா


Visu
மே 27, 2024 19:13

அது பல லட்சம் மதிப்புடையது ஆகையால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது


ஆரூர் ரங்
மே 27, 2024 18:49

குடமுருட்டி குண்டாக இருக்கலாம்.


கத்தரிக்காய் வியாபாரி
மே 27, 2024 18:18

ஏரிகல் எரிகல்னு சொல்லுறீங்க, எங்க கல்லை காணும்?


Natchimuthu Chithiraisamy
மே 27, 2024 19:15

எரிந்து விட்டது


Pandi Muni
மே 27, 2024 19:19

எரிஞ்சிரிச்சி


ems
மே 27, 2024 22:36

எலி திருடிட்டு போயிடுச்சி....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ