உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பிரதமர் வருகையால் சூடுபிடித்த அரசியல் களம்

 பிரதமர் வருகையால் சூடுபிடித்த அரசியல் களம்

வாக்காளர் திருத்தப் பணி என்பது கடுமையானதுதான். அதனால், இந்தப் பணிக்கென கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்தப் பணிக்கு அதிகாரிகளும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான், பணிகளை விரிவுப்படுத்த முடியும். சீர்திருத்த பணி நடந்தால் தான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவர். வாக்காளர் திருத்தப் பணி விவகாரத்தில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. முன்பு, வாக்காளர் திருத்தப்பணி கூடாது என்றவர்கள், தற்போது, போதிய கால அவகாசம் வேண்டும் என்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் தி.மு.க., நடந்து கொள்கிறது. பிரதமரின் தமிழக வருகைக்குப் பின், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பீஹாரைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சட்டசபைத் தேர்தலில், தே.ஜ., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை