உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்

 சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்

சென்னை: 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை' என, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில், கடந்த 19ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தமிழக காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு தலைவர் மகாத்மா சீனிவாசன் வீட்டிலும், சோதனை நடந்ததாக தகவல் வெளியானது. இத்தகவலை, மகாத்மா சீனிவாசன் மறுத்துள்ளார். 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை. அவ்வாறான தகவல் தவறானது' என, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை