உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முந்திரி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

முந்திரி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் சதீஷ்,54; அதே பகுதியில் முந்திரி கொட்டைகள் உடைத்து பதப்படுத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை 6:00 மணிக்குநிறுவனத்தை திறக்க சென்றபோது, ஷட்டர் பூட்டுகள் உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்குள்ள சி.சி.டி.வி.,யை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர், சி.சி.டிவி கேமராவை துண்டால் மறைத்துவிட்டு அலுவலகத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை