சென்னை:'ஒன்பதரை ஆண்டு கால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும், லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பிரதமர் மோடி ஆட்சியை பொறுத்தவரை, ஏழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட, சில குறிப்பிட்ட தொழில் அதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் நடந்த ஊழலை மறைக்க, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக, ஆதாரமற்றஅவதுாறுகளை மோடியும், நிர்மலா சீதாராமனும் லோக்சபாவில் கூறிஉள்ளனர்.கடந்த ஒன்பதரை ஆண்டு பா.ஜ., ஆட்சியில், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் என, குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என, ஆணவத்தோடு பேசி உள்ளார்.கடந்த ஒன்பதரை ஆண்டு கால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதாரபேரழிவுக்கும், வரும் லோக்சபா தேர்தலில்,மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.