உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்க உத்தரவு

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விநாயகர் சிலைகளை கரைக்க, முன் கூட்டியே கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.'இயற்கையான நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க, அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும்' என, சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 'ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கையான நீர் நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.மீண்டும் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசின் வருவாய், பொது, சுற்றுச்சூழல் துறைகளின் செயலர்கள் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு கூட்டத்தை ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் கூட்ட வேண்டும்.விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையான குளங்களை உருவாக்குதல், பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகள் செய்யப்படுவதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கோருவோரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டணத்தை தீர்ப்பாய குழு தீர்மானிக்கும்.விநாயகர் சிலைகள் கரைப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து, மூன்று மாதங்களுக்கு முன், மாவட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளை பராமரிக்க செலவிடலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

நரேந்திர பாரதி
ஜன 25, 2024 16:17

அவனுன்களே எப்படி எப்படி கொள்ளையடிக்கலாம்னு இருக்கானுங்க..இவனுங்க எப்படியெல்லாம் ஐடியா குடுக்குறானுங்க பாருங்க திருட்டு திராவிடியா மாடல்


ஆரூர் ரங்
ஜன 25, 2024 15:29

அடுத்து ஒரு வரிதான் பாக்கி.


ஆரூர் ரங்
ஜன 25, 2024 15:27

அடுத்து இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்க ஆற்றங்கரையில் பிண்டம் வைக்க கூட கட்டணம் வசூலிப்பார்கள????


raja
ஜன 25, 2024 14:23

அப்போ இனி தெருவில் ரோட்டில் தொழுதாலும் கட்டணம் வசூலிக்க படுமா...தொழுதபின் தெருகள் மற்றும் ரோடுகள் பிரியாணி கழிவுகளால் மாசு படுதே... அதான்...


Sakthi Parthasarathy
ஜன 25, 2024 14:19

விநாயகர் வரி, கந்தூரி வரி, மாதா ஊர்வலம் வரி (கட்டணம்) போடலாம்..பலபேரோட உழைப்பு தேவைபடுதே...ஒரே தெருவில் நாலு பிள்ளையார் ஊர்வலம் தடுக்கப்படும்


Rajarajan
ஜன 25, 2024 13:26

ஆண்டவா, என்னத்த சொல்ல? தமிழக கஜானா அவ்வளவு பலவீனமாவா இருக்கு?? அதுசரி, இதுவே மத்த மத விழாக்களுக்கு இந்த மாதிரி கட்டண வசூல் எல்லாம் இல்லையா?? எங்க பணத்தை எடுத்து, மத்த மதத்துக்கு மட்டும் வாரி விடுவீங்க. உங்க துக்ளக் தர்பார் தொல்லை தாங்க முடியல.


hari
ஜன 25, 2024 11:44

கட்டணம் வாங்கி கடலை எப்படி சுத்தம் பண்ணுவீங்க....????.. அத சொல்லுங்க முதல்ல


Sakthi Parthasarathy
ஜன 25, 2024 14:20

மீனவர்களுக்கு நஷ்ட ஈடா கொடுக்கலாம்


Narayanan G
ஜன 25, 2024 16:57

இதுக்கும் மீனவருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் போல இருக்கே?


Sampath Kumar
ஜன 25, 2024 11:43

ஏன் இம்புட்டு நாளும் வசூலிக்க வில்லை இந்த திடீர் ஞானம் எப்படி வந்தது ?


கருத்து சுந்தரம்
ஜன 25, 2024 11:37

களிமண் எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கும்? உங்கள் தலைக்குள் மூளைக்குப் பதிலாக களிமண் இருந்தாலும் இந்த மாதிரி யோசிக்கத் தோணாதே!


M.S Balamurugan
ஜன 25, 2024 12:27

அப்போ அது களிமண் தான்னு நீயே ஒத்துக்கற. கடவுள் இல்ல. கரெக்ட் ah.


தத்வமசி
ஜன 25, 2024 10:52

கம்பெனிகளின் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலக்கலாம், கடலில் கலக்கலாம். ஆற்று மணலை அறுபது அடி தோண்டி எடுக்கலாம், இப்போது கடல் மணலையும் விடவில்லை. அதுவும் கப்பல் கப்பலாக கடத்தப் படுவதாக செய்திகள். சாராய ஆலைகள் நாட்டுக்குத் தேவையா? தவிர மருத்துவக் கழிவுகள் சகட்டு மேனிக்கு கொட்டப்படுகின்றன, வார விடுமுறை நாட்களில் வெட்டப்படும் ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சி கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன? காற்று மாசு அபாயகரமாக அளவில் உள்ளது, வாகனங்களின் புகை கண்ணைக் கட்டுது, தொழிற்ச்சாலைகளின் கழிவுகள் மேடு மேடாக குவிக்கப் படுகின்றன. நெகிழி பயன்பாடு மனித குலத்திற்கே ஆபத்தாக வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இந்த பசுமை தீர்ப்பாயமும், அரசும் என்ன செய்தார்கள்? காசு வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்களா? எவ்வளவு வசூல் செய்தீர்கள்? வருடத்திற்கு ஒருமுறை இயற்க்கை முறையில் செய்யப்படும் பிள்ளையார் சிலைகளுக்கு முந்திக் கொண்டு மூக்கை நுழைக்கும் அனைவரும் இதையும் சிந்தியுங்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளில் தான் உங்கள் மூக்கினை நுழப்பீர்களா? இங்கே சொல்லப்பட்ட மனித குலத்திற்கே அபாயகரமானவற்றை சிந்தித்து ஒரு முடிவு எடுங்கள், பிறகு பிள்ளையார் முழுக்கு பற்றி பேசுங்கள்.


Hari
ஜன 25, 2024 12:29

எனக்கும் சந்தேகம் உண்டு அதாவது ஹிந்து பண்டிகை மற்றும் கோயில் நுழைவு கட்டணம் வசூல் பலகோடிகள் இன்னோவா கார் பிரியாணி இதுவரை கோபாலபுரம் கிழக்கிந்திய வெள்ளையர்களின் கம்பெனியாக இருந்தது இப்போது இவர்களோடு கோயில் வூழியர்கழும் சேர்ந்து பிட்ச்சை எடுக்கும் நிலை மாறி வழிப்பறி அளவிற்கு கட்டணம் என்ற பெயரில் பணம் புடுங்குகிறார்கள்


Hari
ஜன 25, 2024 12:37

இனி லைசென்ஸ் இருந்தால்தான் கோயிலுக்குள்ளே போகமுடியும் இது கோபாலபுரம் உத்தரவூ . லைசென்ஸ் வாங்க வருஷத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் கட்டணம் .


மேலும் செய்திகள்



புதிய வீடியோ