உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் வெளியீடு மாற்றம் : சிறப்பு முகாம்கள் தேதியும் மாற்றம்

வாக்காளர் பட்டியல் வெளியீடு மாற்றம் : சிறப்பு முகாம்கள் தேதியும் மாற்றம்

விருதுநகர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் செய்துள்ளதால், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் முதல் தேதியில் வெளியிடுவது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு அக்., 24 ம் தேதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெற்று, பதிவு செய்து வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறதாவர்கள் புதிதாக விண்ணப்பிக்க, சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. சிறப்பு முகாம்கள் அக்.,9, 16, 23, ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுவதாக இருந்தது. தற்போது அக்.,30, நவ.,6 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் இறுதி பட்டியல் திட்டமிட்டபடி 2012 ஜன., 5 ல் வெளியிடப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை