மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
விருதுநகர்:பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி:மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்க மறுக்கிறது என கூறுவது தவறு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதி பங்கு 32 சதவீதமாக இருந்தது.மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தெரிவித்தார். பிரதமராக மோடி வந்த உடனே மத்திய நிதி கமிஷன் பரிந்துரையை ஏற்று, 42 சதவீதமாக மாநிலங்களுக்கான நிதி பங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை சட்டமாக கொண்டு வந்த போது, தி.மு.க., - எம்.பி., சிவா பாராட்டி உள்ளார்.தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக வருவாய் வழங்குகின்றன. இந்த நிதியை மற்ற மாவட்டங்களுக்கு செலவழிக்கக் கூடாது என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூறினால் என்ன செய்வர்.தேர்தல் நேரத்தில் திருட்டுத்தனமாக மக்களிடையே பொய்யான கருத்துக்களை இண்டியா கூட்டணி கட்சிகள், கழகங்களைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.தமிழகத்தில் 2014 தேர்தலில், கழகங்களின் கூட்டணி இல்லாமல் 19.5 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் டாஸ்மாக்.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழித்து விடுவோம் என தி.மு.க., - எம்.பி., கனிமொழி தெரிவித்தார். எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் அதிக இளம் விதவைகள் உருவாவதற்கு கனிமொழியும், தி.மு.க., அரசும் தான் காரணம்.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago