உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளி மாநில பஸ்கள் இயக்கம் எங்கே

வெளி மாநில பஸ்கள் இயக்கம் எங்கே

சென்னை:சென்னையில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்கு இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மற்றும் பஸ் முனையத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.கோயம்பேடு பஸ் நிலைய இடம் குறித்து, மக்களிடம் கருத்துக் கேட்டு, சி.எம்.டி.ஏ., மற்றும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது, இதுபற்றி தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை