உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனியில் மாதம் 2 முறை தங்குவேன்: உதயநிதி வாக்குறுதி

தேனியில் மாதம் 2 முறை தங்குவேன்: உதயநிதி வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: ‛தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், நான் மாதத்திற்கு 2 முறை தேனியில் தங்கி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன்' என, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாக்குறுதி அளித்து, பேசினார்.தேனி பங்களாமேட்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஓட்டு சேகரித்து, அவர் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டும், வெற்றி வாய்ப்பை இழந்தோம். இம்முறை அதனை ஈடுகட்ட, அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தேனி தொகுதியில் வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்து செல்லும் பிரதமர் என்ன செய்தார். தமிழகம் வரும் அவர் தமிழ் தமிழ் என்று பேசுவார். திருக்குறள் பேசுவார். அது பாதி பேருக்கு புரியவும் புரியாது. இந்த பிரசாரத்தின் நோக்கமே 'மாநில உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்' என்பதுதான். சி.ஏ.ஜி., 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு வெளியிடும். அதில் மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு செலவு கணக்கு காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பணம் எங்கு போனது என யாருக்கும் தெரியவில்லை.தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், நான் மாதத்திற்கு 2 முறை தேனியில் தங்கி மக்களின் குறை தீர்தது வைப்பேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.MURALIKRISHNAN
மார் 31, 2024 10:38

எதற்கு, கனிம வளங்களை கொள்ளையடிக்கவா


Balamurugan N
மார் 29, 2024 19:23

சேப்பாக்கம் தொதிகுதியில் இப்படி தான் வாக்கு கொடுத்தார் சென்னையில் இருக்கும் தொகுதியிலேயே பார்க்க முடியவில்லை இந்த லட்சணத்தில் தேனியில் நல்ல நகைச்சுவை ...


Manoranjith M
மார் 28, 2024 16:36

Yes Then?


m.n.balasubramani
மார் 24, 2024 21:55

then then then


p.a.Baraneedaran
மார் 24, 2024 20:16

யோக்கியன் வர்றான்சொம்ப எடுத்து உள்ள வைங்க


Godfather_Senior
மார் 24, 2024 19:15

Another RaGa type Amul Baby Why did he change his constituency from Chepak to Theni? Oh, that speaks volumes of his commitment to Chepauk voters Links with drug mafia will take him to Tihar soon


Nagarajan S
மார் 24, 2024 17:46

All cheating TN People and majority of the people voting in TN by Getting Money from the DMK & ADMK people thats why these parties giving impossible commitments


R.MURALIKRISHNAN
மார் 24, 2024 17:31

எல்லோரும் அவங்க அவங்க சொத்தை பத்திரமா பாத்துக்கங்கப்பா தேனி வாழ் மக்களே


Narayanan
மார் 24, 2024 15:40

Thagara thamizhselvan : Uthayanithi wanted him to elect by the margin of ,, votes to visit Theni often Enough is enough Why ?? Is Thagara thamizhsevan going to arrange everything for you? By doing your frequent visit dont destroy the beautiful nature of THENI


V GOPALAN
மார் 24, 2024 15:22

Udhaya will spoil Theni by ganja supply Be careful


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி