மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆரால் ஓட்டு குறையாது: கார்த்தி எம்.பி., கருத்து
7 minutes ago
நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோர் வேண்டுதல்
10 minutes ago
விதிமீறிய வாகனங்கள் பறிமுதல்: சிவகங்கை போலீஸ் நடவடிக்கை
11 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பலாத் காரம் செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், கல்லுாரி மாணவர் உட்பட 6 பேருக்கு ஆயுள்கால சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் 43 வயதான பெண். இவர் 2022 ஆக.,22ல் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மதியம் ஊருக்கு தனது நண்பர் முத்துச்செல்வம் என்பவருடன் காரில் திரும்பினார். கோவிலாங்குளம் ஓட்ட கண்மாய் அருகே இருவரும் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், முத்து செல்வத்தை தாக்கி விட்டு அந்த பெண்ணை தாங்கள் வந்த காரில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து 5 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டும், அசிங்கமாக படம் எடுத்தும் மிரட்டி தப்பினர். இச்சம்பவத்தில் கோவிலாங்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் 42, மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பிரபாகரன் 26, விஜய் 22, ராம்குமார் 20, ஜெயக்குமார் 23, கல்லுாரி மாணவர் அழகு முருகன் 19, விருதுநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 12 பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிறுவனை தவிர்த்து மற்ற 6 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். சிறுவன் மீதான வழக்கு விருதுநகர் இளஞ்சிரார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரபாகரன், இந்தாண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப் பட்டி போலீஸ் ஸ்டே ஷனில் ஏட்டு பால்பாண்டியை தாக்கி ஸ்டேஷனை சூறையாடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
7 minutes ago
10 minutes ago
11 minutes ago