உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எடப்பாடி எக்ஸ்பிரஸில் ஏறினால் கோட்டைக்கு போகலாம்

 எடப்பாடி எக்ஸ்பிரஸில் ஏறினால் கோட்டைக்கு போகலாம்

பீஹார் தேர்தல் முடிவு போலவே, தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் முடிவும் அமையும். அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். ஆட்சி மாற்றத்துக்காக, மக்கள் தவமாய் தவம் இருக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோர், அபாண்டமாக பேசினர்; பீஹாரில் அது எடுபடவில்லை. கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை. கள்ள ஓட்டு போடுவதில், கைதேர்ந்த நிபுணர்கள், 40 ஆண்டுகளாக அவர்களிடம் உள்ளனர். வரும் தேர்தலில், அதுபோன்ற முயற்சி பலிக்காது. 'எடப்பாடி எக்ஸ்பிரஸ்' ரயில் கிளம்பி விட்டது.அதில் செல்வோர், பத்திரமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைவர். ரயிலை 'கோட்டை' விட்டவர்கள், களத்தில் இருந்தும் காணாமல் போவர். - ஜெயராமன், தேர்தல் பிரிவு செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ