ஜாபர் சாதிக் கூட்டாளி சிக்கினார் டில்லிக்கு அழைத்து சென்று விசாரணை
சென்னை:சென்னையில் பதுங்கி இருந்த, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தம் கைது செய்யப்பட்டார்.சென்னையைச் சேர்ந்த, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், 35, டில்லியில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், மார்ச், 9ல் கைது செய்யப்பட்டர். இவர், தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.ஜாபர் சாதிக், ஏழு நாள் காவலில் விசாரிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல் தொழிலுக்கு பக்கபலமாக இருந்த அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் குறித்து, தகவலை தெரிவிக்க, ஜாபர் சாதிக் மறுத்து வருகிறார். முகமது சலீம், வி.சி., நிர்வாகியாக இருந்தார். இதனால், அக்கட்சியினர் அடைக்கலம் கொடுத்து இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் நடக்கிறது.இதற்கிடையே ஜாபர் சாதிக்கிடம் நடந்த விசாரணையில், தன் கூட்டாளிகள் குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களில், கோவிந்தராஜ் என்பவரின் மகன் சதானந்தம், 45, முக்கியமானவர். அவர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாவா வியாபாரி போல பதுங்கி உள்ள அவர், உணவு பொருட்கள் போல, 'பார்சல்' செய்து வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்த, சென்னை மற்றும் திருச்சியில் குடோன் நடத்தி வருகிறார்.அவர் மீது, சென்னையில், ஏற்கனவே போதைப் பொருள் கடத்தியது தொடர்பாக மூன்று வழக்குகள் உள்ளன. 'எனக்கு வலதுகரமாக செயல்பட்டார். என் நம்பிக்கைக்கு உரியவர். நான் சட்ட விரோதமாக மேற்கொண்டு வந்த பண விவகாரத்தை கவனித்து வந்தார்' என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சதானந்தம் பதுங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். மொபைல் போன் சிக்னல் டவர் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த சதானந்தத்தை நேற்று காலை கைது செய்து, டில்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
அடைக்கப்பட்ட பின், சந்தியுங்கள் என, தன் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
மேலும், ஜாபர் சாதிக் விசாரணை அதிகாரிகளிடம், தன்னுடன் தொடர்பில் இருந்த, 23 வி.ஐ.பி.,க்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், ஜாபர் சாதிக் வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை தருமாறு, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.